வெஞ்சென்ஸ் விமர்சனம்… கறார் கலெக்டர்… கறக்கும் கலெக்டர்..
வெஞ்சென்ஸ் விமர்சனம்… கறார் கலெக்டர்… கறக்கும் கலெக்டர்..
‘ஜெயில்’, ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்த அபர்ணதி இப்பட நாயகி..
ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் உருவான பரபரப்பான அரசியல் படம் ‘வெஞ்சென்ஸ்’.
கதை…
சிறு வயது முதலே தன் பெயர் எப்போது முதன்மையாக இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பலரும் புகழ வேண்டும் பேச வேண்டும் என விரும்புபவர் அபர்ணதி..
எனவே நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார்.. அதன் பின்னர் அடுத்தடுத்து படித்து பெரிய அளவில் உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வருகிறார்.
இவரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் எப்போதும் இவரது பெயர் பல செய்திகளில் வருகிறது.. அரசியல்வாதிகள் இவரை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்..
இவர் வளர்ந்து வருவதால் அரசியல் எதிரிகள் உருவாகுகின்றனர்.. இதனால் அடுத்தது என்ன நடந்தது.? அரசியல்வாதிகளை எப்படி இந்த கலெக்டர் சமாளித்தார் என்பது தான் மீதிக்கதை..

நடிகர்கள்…
அபர்ணதி, காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர்.
தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தன் பெயரைக் கூட தெரியவில்லை என்பதால் மன உளைச்சலில் இருக்கும் அபர்ணதி அவரின் தந்தை காளி வெங்கட் அறிவுரை மூலம் நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக உயர்கிறார்.. அப்போது அவருக்கு கிடைக்கும் கைத்தட்டல்களுக்கும் பாராட்டுகளுக்கும் அடிமையாகிறார்..
தொடர்ந்து அது போல ஒவ்வொரு நாளும் கிடைக்க வேண்டும் என எண்ணி அபர்ணதி போடும் ஒவ்வொரு சதித்திட்டமும் ஆச்சரியப்படுத்தும்.. கலெக்டராக அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அபர்ணதி அடுத்த நீலாம்பரியாக ஜொலிக்கிறார்..
காளி வெங்கட் கதாபாத்திரம் அனுதாபத்தை அள்ளிக் கொள்ளும்..
ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் அரசியல்வாதிகள்.. அபர்ணதியின் திமிரால் மிரளும் அரசியல்வாதிகள் வில்லத்தனமும் செய்துள்ளனர்..
நீ ஆம்பளையா பொறந்து இருக்கணும்.. ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்க ஒரு ஆணாக எனக்கு அசிங்கம் என இளவரசு பேசும்போது முதலமைச்சரின் அதிகாரத்தை காட்டும்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
கார்த்திக் ராஜா இசை அமைக்க, அருண் ராஜ் பின்னணி இசை அமைத்துள்ளார். இம்ரான் எடிட்டிங் செய்ய, வைரபாலன் அரங்கம் அமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்..
பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. அரசியல் படம் என்றாலே கூட்டம் அதிகமாக காணப்பட வேண்டும்.. ஆனால் பட்ஜெட் காரணமாக பல இடங்களில் கூட்டம் மிஸ்ஸிங்..
பிரபு ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி.
ராகுல் அசோக் இயக்கி உள்ளார்.. பல அரசியல்வாதி படங்களை நாம் பார்த்திருந்தாலும் கலெக்டர் கேரக்டரை முன்வைத்து பெரிய அளவில் படம் வந்தது இல்லை.. விஜயகாந்த் விஜய் நயன்தாரா ஆகியோரின் படங்கள் வந்துள்ளன..

கறார் காட்டும் கலெக்டராகவும்.. அரசியல்வாதிகளிடம் இருந்து கறக்கும் கலெக்டராகவும் அதிரடி காட்டி இருக்கிறார் அபர்ணதி.. நம்ப முடியாத பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கலெக்டர் கேரக்டர் மேஜிக் செய்திருக்கிறது…
Vengeance movie review
—-

