கொலைச் சேவல் விமர்சனம்…
கொலைச் சேவல் விமர்சனம்…
ஸ்டோரி…
கலையரசன் & தீபா.. இவர்கள் இருவரும் புதுமண தம்பதிகள்.. பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர் தீபா.. 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கலையரசனின் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று குடும்பத்தார் விரும்பி அதன்படி அனைவரும் கோயிலுக்கு செல்கின்றனர்.
ஓர் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு செல்லும்போது தீபாவுக்கு ஏதோ ஒரு புதுவிதமான அச்சம் ஏற்படுகிறது.. அதன் பிறகு நடந்தது என்ன.? ஏன் அப்படி ஓர் உணர்வு ஏற்பட்டது.? இரு குடும்பத்தார் என்ன செய்தனர் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
KALAIYARASAN – காளி
DEEPA BALU – அனுசுயா
BALA SARAVANAN – குமார்
கலையரசன் தீபா இருவருக்கும் பக்கா ஜோடி பொருத்தம்.. அசல் கணவன் மனைவி போல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்..
கலையரசன் நண்பனாக பால சரவணன்.. கிராமத்து பாஷையில் கலக்கினாலும் இவரின் உதவி இயக்குனர் கேரக்டர் தேவையற்றது.. மேலும் படத்தின் நீளத்திற்காகவே வசனம் பேசினாரா.?
கஜராஜ் மற்றும் சிறுவன் கேரக்டர் எதிர்பாராத திருப்புமுனை கேரக்டர்..

GAJARAJ – தாஸ்
VIJAY SATHYA – மூர்த்தி
AADHAV CHANDRA – அன்பு
AKARAN VENKAT – சந்திரன்
VIJAYALAKSHMI – லஷ்மி
JAYALAKSHMI – தேவி
RAJAMANI – சித்தன்
DHANALAKSHMI – தனம்
MANJULA – மோகனா
KAYAL – மீனா
MANIMEKALAI – மணிமேகலை

டெக்னீசியன்ஸ்
Banner : RP Films
Produced by : R.P.Bala – Kousalya Bala
Directed by : VR. Thudhivaanan
Cinematographer : P.G.Muthiah
Music : Santhan
Editor : Ajay Manoj
Art Director : Saravana Abhiraman
சந்தன் இசையமைக்க பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. அடர்ந்த காட்டுப்பகுதி.. அங்கே குலதெய்வம் கோயில்.. அதன் அருகே ஓடும் ஆற்று வெள்ளம் என அருமையாக படமாக்கி இருக்கிறார்.. அமைதியான சூழல் இருந்தாலும் பின்னணி இசை மூலம் அதிரடி காட்டி திகில் உணர்வு ஊட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தன்.
துதிவானன் இயக்கி இருக்கிறார்.. இடைவேளை வரை படத்தின் நீளம் குறைவாக இருந்தாலும் காட்சிகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை.. முக்கியமாக இன்டர்வல் காட்சியில் எந்த ஒரு ட்விஸ்ட்டும் இல்லை.
மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் உள்ளிட்ட பல படங்களை தமிழில் டப்பிங் செய்ய வசனங்கள் எழுதியவர் ஆர்பி பாலா இந்த படத் தயாரிப்பாளர்..
கொலை சேவல் என்ற தலைப்பு ஏன் என்று தெரியாவிட்டாலும் ரத்த வெறியை உணர்வை வெளிப்படுத்தும் தலைப்பாகவே தெரிகிறது.. அதற்கு தான் கிளைமாக்ஸ் இப்படி ஒரு வெறித்தனம்.. இது போன்ற நெஞ்சை கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
Kolai Seval movie review

