YOLO விமர்சனம்… தங்களுக்கே தெரியாமல் திருமணம் செய்த ஜோடிகள்
YOLO விமர்சனம்… தங்களுக்கே தெரியாமல் திருமணம் செய்த ஜோடிகள்
ஸ்டோரி…
இந்தப் படத்தில் முதல் காட்சியிலேயே நாயகி தேவிகாவை பெண் பார்க்க வருகிறார்கள்.. அவரும் மாப்பிள்ளைக்கு காபி கொடுத்து வரவேற்க மாப்பிள்ளை உறவினர்கள்.. ‘உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே.. நீங்கள் ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றீர்களா.? என்று கேட்கின்றனர்.
இதனை புரியாமல் தேவிகா மற்றும் அவரது அப்பா படவா கோபி உள்ளிட்டோர் ஷாக் ஆகின்றனர்.
தேவிகாவின் பாஸ்போர்ட் எடுத்து பார்த்தால் அதிலும் அவர் குறிப்பிட்ட தேதியில் ஹனிமூன் சென்று இருப்பது முத்திரையுடன் தெரிய வருகிறது…
தேவிகாவுக்கே தெரியாமல் திருமணம் நடந்தது எப்படி.? அவரது கணவர் யார்.? பாஸ்போர்ட்டில் எப்படி முத்திரை வைக்கப்பட்டது என்ற பின்னணியில்தான் இந்த படத்தின் கதை தொடர்கிறது..

கேரக்டர்ஸ்…
Starring Dev | Devika Satheesh | Akash Premkumar | Badava Gopi | VJ Nikki | Yuvaraj Ganesan | Nidhi Pradeep | Deepz | Pravin | Giri Dwarakish | Subbru | Kalai kumar | Subashini Kannan | Swathi Nair | Divakar| Pooja Fiya | Deepika | Sikkander
அறிமுக காட்சியிலேயே அழகில் நம்மை அசர வைத்து விட்டார் ஹீரோயின் தேவிகா.. அவரது கண்களும் அவரது செல்லக்குரும்புகளும் அழகு..
நாயகன் தேவ்.. இந்த பெண்ணுடன் திருமணம் எப்படி ? எப்போது நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பரிதவிக்கும் காட்சிகள் சிறப்பு..
படவா கோபியின் அறிமுகக் காட்சி ஏதோ யூடியூப் இன்டர்வியூ போல இருப்பது தேவையற்றது.. விஜே நிக்கி ஓவர் ஆக்டிங்.. எரிச்சலை கிளப்பி விட்டார்.. இவரை இப்படி செய்தாரா.? இயக்குனர் சொன்னாரா என்பது அவர்களுக்கு வெளிச்சம்..
பிளாஷ்பேக்கில் இரண்டாம் ஜோடியாக வருபவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
பெரும்பாலும் காதல் படங்களுக்கு கை கொடுப்பது ரொமான்டிக் சாங்ஸ் தான்.. இந்த படத்திற்கு அனைத்தும் சிறப்பு சேர்த்து இருக்கிறது
விழிகளில் நுழைந்தாய்…
முதல் மழைத்துளி நீ… முதல் மயக்கம் நீ….
கண்கள் காணும் ஒரு கனவு..
உள்ளிட்ட பாடல்களின் இசையும் பாடல் வரிகளும் அருமை.. ஒளிப்பதிவாளர் படத் படத்தை கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார்..
காதல் கதையை கொஞ்சம் திரில்லர் கலந்து கமர்சியலாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் சாம்.. படத்தில் அனைத்துமே ஹைடெக் ஆக இருப்பதால் கொஞ்சம் செயற்கை தனமாக காணப்படுகிறது..
Directed by S. Sam
Banner: M R Motion Pictures
Producer: Mahesh Selvaraj
Music Director: Sagishna Xavier
Director of Photography: Sooraj Nallusami
Editor: AL Ramesh
Story: Rams Murugan

Art: M. Devendiran Stunts: Danger Mani Screenplay: S. Sam, Rams Murugan, P. Panbu Selvan, Mahesh Selvaraj Choreographers: Kalaikumar, Raghu Thapa Lyricists: Muthamil, Super Subu, Satheeskanth, Sagishna Xavier, Mahesh Selvaraj Costumer: Natraj Costume designer: Meenakshi Shreedharan Sound Mixing: Kannan Ganpat and Kibi Publicity Designs: Yadav JBS VFX: DTM & WIREFRAME DI: NAS Media DI Colorist: Chittacang Vijaydas Title design: Veera Stills: Maniyan Production Controller: Pudhukottai M. Nagu Teaser and Trailer: T. Shivanandeeswaran Direction team: Co Director: P. Panbu Selvan Associate Directors: A.R. Stephen Raj, D. A. Abeesh Kumar, K. Mani Giriesh, Assistant Directors: Srinanthan I.G., A. Shankar, Asha, T.K. Poorna Chandran PRO: Satish (AIM)
Yolo movie review

