BLACK MAIL விமர்சனம்.. ஸ்பீடு த்ரில்லர்

BLACK MAIL விமர்சனம்.. ஸ்பீடு த்ரில்லர்

 

BLACK MAIL விமர்சனம்.. ஸ்பீடு த்ரில்லர்

ஸ்டோரி…

தமிழகத்தில் கொரியர் சர்வீசில் வேலை செய்கிறார் ஜிவி பிரகாஷ்.. இவரது காதலியை ஒருவர் கடத்தி வைத்துக்கொண்டு 50 லட்சம் பணம் கேட்கிறார்..

இந்த சூழ்நிலையில் ஸ்ரீகாந்த் & பிந்து மாதவி மகளை கடத்த வேறொரு நபர் லிங்கா திட்டம் போடுகிறார்.. எனவே.. அந்த கடத்தல் திட்டத்தை தான் செய்தால் ₹ 50 லட்சம் பணத்தை பெற்று தன் காதலியை மீட்கலாம் எண்ணிக் கொண்டிருக்கிறார் ஜீவி பிரகாஷ்.

இந்த சூழ்நிலையில் ஸ்ரீகாந்தின் மகளை வேறொரு நபர் கடத்தி விடுகிறார்.. இப்படியாக ஒருவரை மற்றொருவர் பிளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் நடந்தது என்ன.? இவர்களின் திட்டமெல்லாம் நிறைவேறியதா.?என்பது தான் இந்த படத்தில் கிளைமாக்ஸ்..

 

கேரக்டர்ஸ்…

ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்துமாதவி, ரமேஷ் திலக் மற்றும் பலர்..

இந்த பிளாக் மெயில் கதைக்கு தேவயான மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்.. குழந்தையை கடத்த ஸ்கெட்ச் போடுவது ஸ்ரீகாந்தியிடம் கெஞ்சுவது இப்படியாக உடல் மொழியில் ரசிக்க வைக்கிறார்..

முக்கியமாக பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று இவர் சொல்லும் அந்த காட்சி கைத்தட்டல்களை பெறும்..

பிந்து மாதவி நடிப்பில் பின்னிட்டீங்க.. குழந்தையை பறிகொடுத்த எமோஷன் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்..

தேஜூ அஸ்வினி அழகில் நடிப்பிலும் கவர்கிறார்.. ஸ்ரீகாந்த் தன்னுடைய நடிப்பில் சிறப்பு கவனம் பெறுகிறார்..

ஹீரோ நண்பராக ரமேஷ் திலக், வில்லனாக லிங்கா, ஓனர் முத்துகுமார் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்..

டெக்னீசியன்ஸ்…

இசை : சாம் சி.எஸ் – வழக்கம் போல பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்..

ஒளிப்பதிவு : கோகுல் பினாய் – சிறப்பு..

தயாரிப்பு : ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி

இயக்கம் : மு.மாறன்.. இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கியவர்.. இந்த முறையும் ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார்..

கதைக்கு தேவை இல்லாத ஐட்டம் டான்ஸ்.. திருநங்கைகள் புகழைப் பாடும் காட்சி சிறப்பு..

அவரா இருக்குமா.? இவரா இருக்குமா என்று நம்மளை யூகிக்க முடியாத அளவுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.. சொல்லப்போனால் செல்போனை எடுக்க முடியாத அளவிற்கு படத்தை விறுவிறுப்பாக த்ரில்லராக கொண்டு சென்று இருப்பது டைரக்டர் டச்.

படம் முழுவதும் கோவை நகரில் நடக்கிறது கோவை பாஷை எப்போதும் ஒரு தனி சிறப்பு.. ஆனால் ஒருவர் கூட பெரிதாக கோவை மொழியில் பேசவில்லை..

Blackmail movie review