எமகாதகி விமர்சனம்… 4/5.. பெண்மையைப் பேசும் பிடிவாதக்காரி
எமகாதகி விமர்சனம்… 4/5.. பெண்மையைப் பேசும் பிடிவாதக்காரி
ஸ்டோரி…
ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.. இவரின் மனைவி கீதா கைலாசம்
இவர்களுக்கு ஒரு மகனும் (சுபாஷ் ராமசாமி) மகளும் (ரூபா கொடுவாயூர்) உள்ளனர். மகள் ரூபாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதால் சுவாச மருந்தும் அடிக்கடி எடுத்துக் கொள்கிறார்..
ஒரு பக்கம் இந்த கட்டத்தில தங்களின் கிராமத்தில் கொடை விழா நடைபெறுவதால் ஊர் மக்கள் தயாராகி வருகின்றனர்.. இந்த நிலையில் சுபாஷ் ராமசாமி கோயில் க்ரீடத்தை திருடி விடுகிறார்.
ஒரு நாள் குடும்பப் பிரச்சனை காரணமாக மகள் ரூபா தற்கொலை செய்து கொள்கிறார்.. ஆனால் இது பிரச்சனை வெளியே தெரிந்துவிடும் என்பதால் மகள் மூச்சு திணறல் காரணமாக இறந்து விட்டார் என குடும்பத்தினர் வெளியே செல்கின்றனர்.
கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி இருக்க ரூபா பிணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர்.. பல பேர் முயற்சித்தும் அந்த பிணத்தை அந்த இடத்தை விட்டு அகற்ற முடியாமல் தவிக்கின்றனர்..
இதனால் கிராம மக்கள் பயந்து ஒதுங்குகின்றனர்.. ரூபாவின் பிணம் ஏன் நகரவில்லை.. அந்த ஆன்மா சொல்ல நினைப்பது என்ன? என்பதெல்லாம் படத்தின் ஹைலைட்..
கேரக்டர்ஸ்…
Roopa Koduvayur As Leela
Narendra Prasath As Anbu
Geetha Kailasam As Chandra
Raju Rajappan As Selvaraj
Subash Ramasamy As Muthu
Haritha As Prema
நாயகி ரூபா கொடுவாயூர்.. தமிழில் முதல் படம் என்றாலும் நம்ப முடியவில்லை.. தமிழ் உச்சரிப்புகளை கூட அழகாக பேசி தமிழ் ரசிகர்களை மயக்கி விடுவார்.. வழக்கமான ஹீரோயின் போல் அல்லாமல் கிராமத்து பெண்ணாகவே தன் கேரக்டரை அசால்டாக செய்திருக்கிறார்..
கதையின் நாயகனாக அன்பு கேரக்டர் நடித்தவர் நரேந்திர பிரசாத்.. இவர் தன் காதலியை உயிர் என்று அழைப்பதும் அழகே.. காதலியிடம் கோபப்படுவது முதல் காலை பிடிப்பது என அனைத்திலும் கவர்கிறார்.
ரூபாவின் அண்ணனாக நடித்த சுபாஷ் தன் நடிப்பு சபாஷ் போட வைக்கிறார்.. இனி இவரை ஹீரோவாக பார்க்கவும் வாய்ப்பு உண்டு..
அப்பா கேரக்டர் நடித்த ராஜுவ் ராஜப்பன் எதார்த்த அப்பாவாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. மகள் மரணத்தில் இருந்து மீள முடியாத அம்மா கீதா கைலாசம் பேசாமல் இருந்து திடீரென கொந்தளித்து அழும் காட்சிகள் காண்போர் மனதை கலங்கடிக்கும்..
இவர்கள் இல்லாமல் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தியேட்டர் ஆர்கெஸ்ட்களை அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.. இவர்கள் அனைவரும் தங்கள் நடிப்பில் பளிச்சிடுகின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
Story, Screenplay and Director: Peppin George Jayaseelan
DOP: Sujith Sarang
Editor and Colorist: Sreejith Sarang
Music Director: Jecin George
Dialogues: S Rajendran
Art Director: P Joseph Babin
Lyrics: Gnanakaravel, S Rajendran, Thanjai Selvi
Production Executive: Manavai Logu
Creative Producer: Sujith Sarang
PRO: Sathish, Siva (AIM)
Producer: Srinivasarao Jalakam
Production Banner : Naisat Media Works
Co Producer: Ganapathi Reddy
சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறைந்த பட்ஜெட் கிராமத்து கதை என்பதை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப கிராமத்து வெளிச்சத்திலேயே படமாக்கி இருக்கிறார்..
ஜெசின் ஜார்ஜின் இசையில் பாடல்கள் கதையுடன் ஒன்றி பயணிப்பது கூடுதல் சிறப்பு..
ராஜேந்திரன் வசனங்கள்.. ஜோசப் பாபீன் கலை, ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங்.. என அனைவரும் பாராட்டும்படியான பணியை கொடுத்திருக்கின்றனர்..
இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு கதையை பார்த்திருக்குமா? என்பது சந்தேகமே..
பேச நினைத்ததை பேச முடியாமல் தவிக்கும் பெண்களுக்காக இந்த எமகாதகியை கொடுத்திருக்கிறார் இயக்குநர். ( ஆனால் உங்கள் மனதில் ஒரு சந்தேகம் எழ வாய்ப்பிருக்கிறது.. இத்தனை சமூக வலைத்தளங்கள் இருக்கும்போது பெண்கள் பேச முடியாமல் தவிக்கிறார்களா? என்ற கேள்வியும் எழும்..)
கலப்பு திருமணம், குடும்ப கெளரவம் பல சாதிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சாதியை வைத்து கிராமத்தில் அழகான கிராமத்து கிரைம் திரில்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்..
Yamakaathaghi movie review
—–

