தாத்தா கால கதை.. ஜோசியம் சொல்வது..; இனியாவது FAKE மீடியாக்கள் திருந்தனும்..; விளாசும் விஜய்

தாத்தா கால கதை.. ஜோசியம் சொல்வது..; இனியாவது FAKE மீடியாக்கள் திருந்தனும்..; விளாசும் விஜய்

 

தாத்தா கால கதை.. ஜோசியம் சொல்வது..; இனியாவது FAKE மீடியாக்கள் திருந்தனும்..; விளாசும் விஜய்

 

கடந்த சில நாட்களாக தவெக கட்சி மீது வீசப்படும் பல்வேறு கேள்விகளுக்கு முற்றிப் புள்ளி வைக்கும் விதமாக அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் ஒரு நீண்ட அறிக்கை தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்..

அந்த அறிக்கை இதோ..

“கல்லாப் பெட்டி” கனவுகளும்…
கற்பனைப் போர் வீரர்களும்!

தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக, கற்பனைக் கதைகளை எழுதி “உண்மைக்குப் புறம்பான” செய்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னர் இதேபோல் திரு. பவன் கல்யாண் அவர்களை நம்மோடு தொடர்பு செய்து வதந்திகள் கிளப்பப்பட்டன. “அவர் பேசிவிட்டார் கைகோர்த்துவிட்டார்” என்று “வாடகை வியாபாரி” ஒருவர் பரப்பிய பொய்செய்தியை வைத்து ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. ஆனால், பவன் கல்யான் அவர்களே ஒரு நேர்காணலில், “நான் இவர்களுடன் பேசி இருபது ஆண்டுகள் ஆகிறது” என்ற உண்மையை உடைத்தபோது, வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை கிழிந்தது.

மீண்டும் அதே ‘பழைய ஸ்கிரிப்ட்டை’ அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்மானத்தை விற்று, சில “கல்லாப் பெட்டி” முதலாளிகளின் லாபத்திற்காகச் செய்திகளைச் சமைக்கும் சில எழுதுகோல்களுக்கு ஒன்று புரியவில்லை..

தம்பி.. உங்கள் தாத்தா காலத்து கற்பனைத் கதைகளை சினிமா திரைக்கதைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம், அரசியலுக்கு இனி எடுபடாது. பொய்ச் செய்திகளைப் பரப்பித் தொண்டர்களைக் குழப்பலாம் என்று கணக்கு போட்டால், அது உங்கள் கணக்கைத் தான் முடித்து வைக்கும்.

போட்டிக்கு என்று சில “Virtual Warriors” உங்களை குறித்து இதே போல சில செய்திகளை சிறப்பாக பரப்பினால்??? நீங்கள் தாங்க மாட்டீர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை குறித்து போலி செய்திகளை பரப்பும் போலி ஊடகங்கள் தானாகவே “ஜோசியம்” பார்ப்பதை நிறுத்துங்கள். சட்டம் ஒழுங்கு சீரழிவை திசைத்திருப்ப இப்படி பொய் செய்தி பரப்புவது முற்றிலும் தவறு..

கூடுதல் தகவல்..

நாம் ஒரு மீடியா பிரிவில் இருந்தாலும் விஜய் சொல்வது ஒரு விதத்தில்  நியாயமே.. காரணம்.. : இங்கு உள்ள பல மீடியாக்கள் பல செய்தித்தாள்கள் நிறுவனங்கள் கட்சி சார்ந்த செயல்படுகிறது.. அந்தந்த கட்சிக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்..

ஊடகம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும்.. எந்த கட்சியும் சாராமல் மக்களுக்கு நல்ல தகவல்களை சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து.. எனவே தான் இந்த பதிவும்.. 🙏🏻🙏🏻

 

Vijay Trolls fake media against TVK alliance

 

 

 

Related articles