வீர வணக்கம் விமர்சனம்… புரட்சியாளருக்கு புகழ் மாலை
வீர வணக்கம் விமர்சனம்… புரட்சியாளருக்கு புகழ் மாலை
ஸ்டோரி…
1940 – 46ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார்
கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சியாளர் கிருஷ்ண பிள்ளை என்பவரை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்..
இத்துடன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கான அரசியல் உறவு.. பெண்கள் முன்னேற்றம்.. சமூக நீதி போராட்டம் ஆகியவற்றையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் வி.நாகேந்திரன்.
பரத் ஒரு கம்யூனிஸ்ட் பற்றாளர்.. இவர் அந்தப் பகுதியில் மிகப்பெரிய செல்வந்தர்.. அனைவருடனும் சகஜகமாக பழகி வருகிறார்.. பக்கத்து ஊரில் சாதிய பிரச்சனையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ நினைக்கிறார்.. எனவே அதன்படி சிலரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார்..
96 வயதான பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி மற்றும் புரட்சியாளர் பி.கிருஷ்ண பிள்ளை சந்திக்க வைத்து அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை..

கேரக்டர்ஸ்…
Samuthirakani, Bharath, Rithesh, Prem Kumar, Ramesh Pisharody, Surabhi Lakshmi, P.K. Medini, Aadharsh
புரட்சியாளர் கிருஷ்ணபிள்ளை கதாபாத்திரத்திற்கு உடல் மொழியால் சிறப்பு சேர்த்து இருக்கிறார் சமுத்திரக்கனி.. புரட்சிகர வசனங்களை பேசி பூரிப்படைய வைக்கிறார் கனி..
முறுக்கேறிய மீசை கம்யூனிச வாதி என பரத் பக்கா பொருத்தம்.. இவரின் வயதை மீறிய கேரக்டர் என்றாலும் அதற்கு நிறைய மெனக்கடல் கொடுத்திருக்கிறார்.. ஆணவக்கொலை & நாடக காதல் உள்ளிட்டவைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்..
கம்யூனிச போராளி ரித்தேஷ், போலீஸ் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆய்ஷ்விகா உள்ளிட்டோரும் தங்கள் கேரக்டர் மூலம் இந்த வீர வணக்கத்திற்கு வீரம் சேர்த்து இருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
Producer : Visarad Creations
கவியரசு ஒளிப்பதிவு.. காட்சிகளில் போராட்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்..
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் அருமை.. பின்னணி இசை சுதந்திரப் போராட்ட காலத்தை நினைவுபடுத்துகிறது..
இயக்குனர் – அனில் வி.நாகேந்திரன்.. மக்களின் போராட்டமே மகத்தான தீர்வைத் தரும் என்பதை வலியுறுத்தி இந்த படத்தை கிருஷ்ண பிள்ளைக்கு சமர்ப்பணம் வகையாக கொடுத்திருக்கிறார் டைரக்டர்..
இந்த வீர வணக்கம் மலையாள சினிமாவில் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருந்தால் படத்தில் கமர்சியலுக்காக நிறைய பிரம்மாண்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்..
ஆனால் மலையாள உணர்வை தரும் வகையில் மலையாள மண் சார்ந்த கதையாக படமாக்கி இருப்பது சிறப்பு..
Veera Vanakkam movie review

