சொட்ட சொட்ட நனையுது விமர்சனம்…. வழுக்கை தலையாரின் வாழ்க்கை தடம்..
சொட்ட சொட்ட நனையுது விமர்சனம்…. வழுக்கை தலையாரின் வாழ்க்கை தடம்..
ஸ்டோரி…
வசதியானவராக இருந்தாலும் இளம் வயதில் தலையில் வழுக்கை விழுந்ததால் வரன் கிடைக்காமல் அவதிப்படுகிறார் நாயகன் நிஷாந்த் ருஷோ..
பல பெண்கள் இவரை நிராகரித்து விட ஒரு கட்டத்தில் இவரை மணக்க சம்மதிக்கிறார் ஷாலினி.. திருமணம் நெருங்கும் வேளையில் திடீரென திருமணத்தை நிறுத்தி விடுகிறார் நாயகன் நிஷாந்த்..
பெண் கிடைக்காமல் அவதிப்பட்ட வந்த நாயகன் திடீரென திருமணத்தை நிறுத்த என்ன காரணம்.? அதன் பின்னணி என்ன.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
தலையில் முடி இல்லாத ஹீரோக்கள் விக் வைத்து நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் சொட்டை தலையுடன் நடிக்க தைரியமாக முன்வந்த நிஷாந்துக்கு பாராட்டுக்கள்.. முடி இல்லாத காரணத்தால் திருமணம் தள்ளிப் போகும் ஆண்களின் மனவலியை எதார்த்தமாக தன் நடிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார் நிஷாந்த் ருஷோ..
நாயகிகளாக பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி.. இருவரும் பொருத்தமான தேர்வு. நடிப்பிலும் கவர்கின்றனர்..
இவர்களுடன்… ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் என நிறைய காமெடி நட்சத்திரங்களை காண முடிகிறது.. ஆனால் சிரிப்பை தான் வர வைக்க முடியவில்லை..
டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி.. பாடல்களும் பின்னணி இசையும் கதை களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரயீஷ்.. காரைக்குடியை அழகாக காண்பித்திருக்கிறார்.. டைட்டில் சொட்டைத்தலை என்பதால் அதை மையப்படுத்திய பல ஆங்கிள்களை வைத்திருக்கிறார்..
படத்தொகுப்பாளர் ராம் சதீஷ் ஓகே..
இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத்… வழக்கமான கதையாக அல்லாமல் வித்தியாசமான திரைக்கதையை நகைச்சுவை கலந்து ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு..
ஆனாலும் வாழ்க்கைத் தலை போல திரைக்கதையில் கொஞ்சம் வழுக்கல்களை காண முடிகிறது..
Sotta Sotta Nanaiyuthu movie review

