வீர தீர சூரன் விமர்சனம் 4.25/5… ஆக்ட்டிங் ஆக்ஷன் கெத்து காட்டிய விக்ரம்

வீர தீர சூரன் விமர்சனம் 4.25/5… ஆக்ட்டிங் ஆக்ஷன் கெத்து காட்டிய விக்ரம்

 

வீர தீர சூரன் விமர்சனம் 4.25/5… ஆக்ட்டிங் ஆக்ஷன் கெத்து காட்டிய விக்ரம்

 

ஸ்டோரி…

தன் வீட்டு வாசலில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் விக்ரம்.. இவரது அம்மா ஸ்ரீஜா.. இவரது மனைவி தூஷாரா.. இவர்களுக்கு 2 பிள்ளைகள்..

ஒரு நாள் இரவில் ஊர் பெரியவர் ரவி (பிருத்வி), அவருடைய மகன் கண்ணன் (சுராஜ் வெஞ்சரமூடு) ஆகியோர் மீது ஒரு கொலை குற்ற புகார் வருகிறது.. இதனை பயன்படுத்தி இவர்களை போட்டு தள்ள என்கவுண்டரை கையில் எடுக்கிறார் போலீஸ் எஸ்ஜே. சூர்யா.

அதே சமயம் ஏற்கனவே தனக்கு அறிமுகமான விக்ரம் உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி.. ஆனால் சூராஜூக்கு இதில் விருப்பம் இல்லை..

இந்த சமயம்.. சில வருடங்களுக்கு முன்பு.. விக்ரம் & சூர்யாவுக்கு பழக்கம் இருக்கிறது.. எனவே என்ன செய்தார் விக்ரம்..? யாருக்கு உதவினார்.? என்பது மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

விக்ரம் – துஷாரா காட்சிகள் மனதில் ஒட்டிக் கொள்ளும்.. இன்னும் ரொமான்ஸ் சீன் வேணும் என ரசிகர்கள் ஏங்குவர்.. ஒரு வேளை கெமிஸ்ட்ரி முதல் பாகத்தில் இருக்குமோ.?

விக்ரம் & தூஷாரா அறிமுக காட்சியில் பைக் சீன் செம.. விக்ரம் வெறும் டிரௌசர் போட்டு வரும் காட்சி.. வேஷ்டி கட்டும் சீன்.. கிழங்கு குண்டு வைக்கும் சீன் மாஸ் காட்டி இருக்கிறார்.. அவரின் பாடி பிட்டிங் உடலும் கதைக்கு பொருத்தம்…

வழக்கம்போல் துஷாரா விஜயன் நடிப்பிலும் அழகு.. மீண்டும் விக்ரம் பழைய மாதிரி ஆவாரோ? என தவிக்கும் சீன்கள் அருமை..

வழக்கம்போல நடிப்பில் அமர்க்களப்படுத்தி
போலீஸ் ஆக மாஸ் எஸ்.ஜே.சூர்யா.. ஊர் பெரியவராக பிருத்வி.. மிரட்டல் வில்லத்தனம்.. இவரது மகனாக மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு.. இவரின் தமிழ் கலந்த மலையாளம் கூட அழகு.. விக்ரமுடன் போட்டிப் போட்டு நடித்துள்ளார்… சூர்யா இவரை கண்டு புடிக்கும் காட்சியில் நடிப்பு ரசிக்கும் ரகம்.. பொறுப்பான அன்பான அம்மா ஸ்ரீஜா ரவி..

 

டெக்னீசியன்ஸ்…

பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.. ஒளிபதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா வேற லெவல்.. கிழங்கு காட்சி.. திருமண காட்சி.. ஜன்னல் வழி சுவற்றில் நடக்கும் காட்சி ஒளிப்பதிவு சிறப்பு.. எடிட்டர் பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பில் திரில்லர் பீல்..

திரை உலகில் யாரும் செய்யாத வகையில் புதுமையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குநர் அருண்குமார்… இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

போலீஸ்க்கும் ஊர் பெரியவருக்கும் என்ன பிரச்சினை? தெரியவில்லை.. ஒரு வேளை முதல் பாகத்தில் இருக்குமோ.?

வழக்கமான பழிவாங்கும் கதை ஆனாலும் ஒவ்வொரு காட்சியிலும் ஆக்ஷன் கலந்து குடும்ப சென்டிமென்ட்டை கொடுத்திருக்கிறார்.. இந்த பார்முலா சூப்பர்.. காரணம் ஒரே நேரத்தில் ஆண்கள் & பெண்களையும் கவர்கிறார்..

Veera Dheera Sooran movie review