L2 EMPURAAN விமர்சனம்.. 3.5/5

L2 EMPURAAN விமர்சனம்.. 3.5/5

 

L2 EMPURAAN விமர்சனம்.. 3.5/5

 

ஸ்டோரி…

கேரள மாநிலத்தில் மக்கள் ஆதரவு பெற்ற முதல்வர் திடீரென இறந்து விட அவரது மருமகன் முதல்வராக ஆவார்.. ஆனால் அவரோ கஞ்சா உள்ளிட்ட விற்பனையை பெரிதாக்கி மக்களை போதைக்கு அடிமையாக்கி இருப்பார்..

இதனை எடுத்து முதல்வரின் மாணவரான மோகன்லால் முதல்வரின் மகனான டோவினோ தாமசை முதல்வராக்கி சில வருடங்களில் தலைமறைவாகிவிடுவார்.. இதுதான் லூசிபர் படத்தில் முதல் பாக கதையாகும்.

லூசிபர் 2ஆம் பாகம் எம்புரான் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.. இதிலும் டோவினோ தாமஸ் மக்களை நல்வழி படுத்தாமல் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அபிமன்யு சிங் உடன் கைகோர்க்கிறார்.

இதற்கு டோவினோ அக்கா மஞ்சு வாரியர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. எனவே மஞ்சுவை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறார் அபிமன்யு..

இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.. அப்போது மக்களின் நல்ல நம்பிக்கையை பெற்ற குரேஷ் ஆப்ராம் என்ற ஸ்டீஃபர்ன் நெடும்பள்ளி (மோகன்லால்) முயற்சியால் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

ஏற்கனவே மக்களின் நம்பிக்கை பெற்ற அவர் இந்த முறை மீண்டும் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தினாரா.? மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்கச் செய்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை.

மேலும் 5 ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த மோகன்லால் எங்கு சென்றார்? என்ன செய்தார்? என்பதும் கதை..

இதனிடையில் மோகன்லாலுக்கும் இந்த படத்தின் மற்றொரு நாயகனும் இயக்குனருமான பிருத்விராஜ்க்கும் என்ன தொடர்பு என்பதுதான் ‘எல்2: எம்புரான்’..

கேரக்டர்ஸ்…

Mohanlal as Khureshi Ab’raam / Stephen Nedumpally

Pranav Mohanlal as Young Khureshi Abr’aam / Stephen Nedumpally

Prithviraj Sukumaran as Zayed Masood

Karthikeyaa Dev as Young Zayed

Abhimanyu Singh as Balraj

Tovino Thomas as Jathin Ramdas

Manju Warrier as Priyadarshini Ramdas

Indrajith Sukumaran as Govardhan

Karthikeya Dev as Young Zayed

Kishore as Karthik

Suraj Venjaramoodu as Sajanachandran

Fazil as Father Nedumpally

கேரக்டர்ஸ் மேற்கொண்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பு… மோகன்லால் மாஸ்.. ஒரு பக்கம் வேஷ்டி சட்டை.. மறுபக்கம் கோட் ஷூட் என மாஸ் காட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

Director – Prithviraj Sukumaran
Producer – Antony Perumbavoor
Producer – Gokulam Gopalan
Production – Sree Gokulam Movies , Aashirvad Cinemas Pvt Ltd
Writer – Murali Gopy
DOP – Sujith Vaassudev
Music – Deepak Dev
Editor – Akhilesh Mohan
Art Director – Mohandas
Action – Stunt Silva
Costume – Sujith Sudhakaran
Makeup – Sreejith Guruvayoor
VFX Supervisor – Praveen Ghanta
Multilingual Dubbing Director -RP Bala
DI – Annapurna Studios
Colorist – Vivek Anand

கேரளா ஒரு சிறிய மாநிலம்.. ஆனால் மலையாளிகள் உலகம் முழுவதும் நிரம்பி கிடக்கின்றனர்.. இதனை வைத்து கேரள அரசியல் களத்தை வைத்து உலக நாடுகளுடன் இணைத்து ஆக்சன் விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரித்விராஜ்.

எம்புரான் பாகத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார் முரளி கோபி..

இதில் 2002 குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.. இப்படியான திரைக்கதையை நகர்த்தி சென்றாலும் நாயகன் மோகன்லால் அறிமுகமாகும்போது இடைவேளை நெருங்கி விடுகிறது..

நாயகன் : மோகன்லால்

இயக்குநர் : பிருத்விராஜ்

ஒளிப்பதிவு : சுஜித் வாசுதேவன்

இசை : தீபக் தேவ்

எடிட்டிங் : அகிலேஷ் தேவ்

இவர்கள் ஐந்து பேர் தான் இந்தப் படத்தை தாங்கி நிற்கும் தூண்கள்.. ஆனால் பெரும்பாலும் மலையாள படங்கள் எப்போதும் கேரள மனிதர்கள் ஒட்டியே பின்னப்பட்டிருக்கும்.. ஆனால் இதில் கதை அந்நியப்பட்டு நிற்கிறது..

முக்கியமாக கேரளா அரசியல் கதை சொல்லப்பட்டிருந்தாலும் அரபி நாடுகள் வரை சென்று கதை மீண்டும் இங்கே வருகிறது.. ஒரு பக்கம் இதன் பிரம்மாண்டம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இது கதையுடன் ஒன்ற மறுக்கிறது..

 

L2 Empuraan movie review