யுஐ.. Ui திரை விமர்சனம்
யுஐ.. Ui திரை விமர்சனம்
ஸ்டோரி…
நீங்கள் புத்திசாலி என்றால் தியேட்டர் விட்டு வெளியேறுங்கள்.. முட்டாள் என்றால் படத்தை பாருங்கள் என்ற டைட்டில் கார்டுடன் படத்தை தொடங்கி இருக்கிறார் நடிகர் இயக்குனர் உபேந்திரா.. ஆனாலும் நாம் விடுவதாக இல்லை.. அப்படி என்னதான் படத்தை சொல்லி இருக்கிறார் என்ற மனநிலையிலேயே படத்தை பார்க்க ஆரம்பிக்கிறோம்.. படம் முடிந்த பிறகு நாம் புத்திசாலியா முட்டாளா என்று முடிவு செய்து கொள்வோம். மக்களே..
உபேந்திரா இயக்கத்தில் வெளியான சினிமா ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சில ரசிகர்கள் பித்து பிடித்தது போல் ஆகி விடுறார்கள்.. சில ரசிகர்கர் தைரியமான முடிவுகளை எடுக்க துணிகிறார்கள்..
இதனால் இந்த படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும் ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்புகிறது.. சரி ரசிகர்கள் தான் இந்த மனநிலை இருக்கிறார்கள் என்றால் முன்னணி திரைப்பட விமர்சகர் 4 முறை படத்தை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார்..
ஆனாலும் குழப்ப மனநிலையில் இருக்கும் அந்த விமர்சகர் இயக்குநர் உபேந்திராவை தேடி செல்கிறார்.. விடை கிடைத்ததா?, என்பது தான் ’யுஐ’ படத்தின் கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
Casting : Upendra, Reeshma Nanaiah, Achyuth Kumar, P. Ravi Shankar, Sadhu Kokila
Music By : B.Ajaneesh Loknath
Directed By : Upendra
Produced By : Lahari Films & Venus Enterrtainers – G. Manoharan, Sreekanth K. P, Bhaumik Gondaliya
சத்யா & கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் உபேந்திரா.. சத்யா கேரக்டர் சாந்தம் என்றால் கல்கி கேரக்டர் கலக்கல் ரகம்..
நாயகியாக ரீஷ்மா நானய்யா.. பெரும்பாலும் பாடல் காட்சிக்காகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்..
திரைப்பட விமர்சகராக முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ் ஆகிய கேரக்டர்ஸ் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது..
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் கேமரா கண்கள் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.. கல இயக்குனரின் கைவண்ணம் படத்தில் கலைநயத்தை கூட்டி இருக்கிறது..
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படி அமைந்துள்ளது..
நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன்னே தியேட்டரை விட்டு சென்றுவிடுங்கள்” என்ற வாக்கியத்துடன் டைட்டில் போட்டு படத்தை தொடங்கி இருக்கிறார்..
நடிகர் உபேந்திரா இயக்குனராக மாறியிருக்கிறார்.. எனவே தனது முதல் படத்திலேயே சமூக கருத்தை சொல்ல வேண்டும் என முயற்சித்து இருக்கிறார்.. ஒழுங்கான சாலைகள் இல்லை ஆனால் டோல் கேட் வரி போல பல உதாரணங்களை காட்டியிருக்கிறார்.. மக்கள் வரி பணம் வீணடிக்கப்படுவதையும் மக்கள் பசி பட்டினியுடன் கிடப்பதையும் விண்வெளிக்கு செலவழிப்பதையும் என உள்ளூர் முதல் உலக அரசியல் வரை சாடி இருக்கிறார்..
இல்லாத மதம் இல்லாத சாதி இவற்றை வைத்தே மக்களை பிளவுப்படுத்தி விடலாம் என்பதையும் கல்கி மூலம் அடையாளப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் உபேந்திரா… ஆனால் சொல்ல வந்த திரைக்கதையை குழப்பத்துடன் சொல்லி இருப்பதால் பல காட்சிகள் அயற்சி அடைய வைக்கிறது..
Upendras Ui movie review

