முஃபாசா : தி லயன் கிங் Mufasa : The Lion King விமர்சனம்
முஃபாசா : தி லயன் கிங் Mufasa : The Lion King விமர்சனம்
ஸ்டோரி…
வனப்பகுதியில் தன் சிறுவயது வாழ்க்கையை தொடங்குகிறது முஃபாஷா. ஒரு கட்டத்தில் வனப்பகுதி வறட்சி ஆகும்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் தன் பெற்றோரை பிரிய நேரிடுகிறது.. இதனால் பாதை மாறி வேறு ஒரு காட்டுப் பகுதியில் சென்று அங்கு வேறு ஒரு ராஜாவை தலைமையாக ஏற்க நேரிடுகிறது..
ஆனால் முபாஷாவை அந்த கூட்டத்தில் சேர்க்க மறுக்கிறது ராஜா.. ஆனாலும் ராஜாவின் மனைவி முஃபாஷாவுக்கு ஆதரவு கொடுக்க அங்கு வாழ வழிவகை கிடைக்கிறது..
அதன்பின் முபாசா வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
Cast : Mufasa, Takka, Rafiki, Simon, Pumbaa
Directed By : Barry Jenkins
Music By : Dave Metzger Nicholas Britell (score) and Lin-Manuel Miranda (songs)
Produced By : Walt Disney Pictures
சிறுவர்களுக்கான சிங்கம் படம் என்றாலும் பெரியவர்கள் ரசிக்கும் படி வகையில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. எது ஒரிஜினல்? எது கிராபிக்ஸ்? என்று தெரியாத அளவிற்கு தொழில்நுட்பம் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது..
‘தி லயன் கிங்’ பாத்திரங்களில் நம்மை அதிகம் கவர்ந்த டிமோன் மற்றும் பும்பா இது கேரக்டர்களும் மனதை விட்டு நீங்காதவை… இதற்கான காட்சிகளை கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தால் படத்தை அதிகமாக ரசித்து இருக்கலாம்..
தமிழ் பதிப்பின் பாத்திரங்களுக்கு குரல் கொடுத்த நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், நாசர், அசோக் செல்வன் ஆகியோர் சிறப்பு.. அர்ஜுன் தாஸ் குரல் அதிகம் கவனம் ஈர்க்கிறது.. விடிவி கணேஷ் “இங்கே என்ன சொல்லுது…” என்ற தனது பிரைவேட் டயலாக்கை ஓர் இடத்தில் அவர் பேசியிருப்பது கைத்தட்டை பெற வைக்கிறது..
என்னதான் பிரபல நடிகர்களை வைத்து வாய்ஸ் ஓவர் டப்பிங் கொடுத்து இருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த முபாசா அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்திருக்கும்..
Mufasa The Lion King movie review

