05/10/2024 RIGHT NEWS : விஜய்யை தாக்கிய உதயநிதி.. ஒரே மேடையில் திருமா & விஜய்.?.. கஸ்தூரி மீது 4 வழக்கு

05/10/2024 RIGHT NEWS : விஜய்யை தாக்கிய உதயநிதி.. ஒரே மேடையில் திருமா & விஜய்.?.. கஸ்தூரி மீது 4 வழக்கு

 

05/10/2024 RIGHT NEWS : விஜய்யை தாக்கிய உதயநிதி.. ஒரே மேடையில் திருமா & விஜய்.?.. கஸ்தூரி மீது 4 வழக்கு

 

* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று தலைவரை முதல்வர் நாற்காலியில் மீண்டும் உட்காரவைப்போம். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கல்ல இருந்து வந்தாலும் சரி.. 2026-ல் தி.மு.க தான் வெற்றி பெறும்” என விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு..

 

* வரும் 2024 டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.. மேலும், தி.மு.க கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்ற ஊசலாட்டம் தங்களிடம் இல்லை எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்..

 

* ஆந்திர முன்னாள் அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா, திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்..

 

* அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்..

 

* உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது.. டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி.. வென்று ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? விரைவில் முடிவுகள்..

 

* பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் தெய்வானை கோவிலில் சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

 

* தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னையில் 4 பிரிவின்கீழ் அவர் மீது மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தவறான வதந்திகளை பரப்புவது மொழி, பிராந்திய குழுக்கள் இடையே பகை உணர்வு ஏற்படும் வகையிலும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுவது, உள்ளிட்ட 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Udayanidhi attack Vijay and Four cases on Actress Kasthuri