AMARAN SUCCESS முகுந்தன் ஜாதி ஏன் இல்லை.? – ராஜ்குமார்..; எனக்கு பெரிய பட்ஜெட் தேவை.. – சிவகார்த்திகேயன்

AMARAN SUCCESS முகுந்தன் ஜாதி ஏன் இல்லை.? – ராஜ்குமார்..; எனக்கு பெரிய பட்ஜெட் தேவை.. – சிவகார்த்திகேயன்

 

 

AMARAN SUCCESS முகுந்தன் ஜாதி ஏன் இல்லை.? – ராஜ்குமார்..; எனக்கு பெரிய பட்ஜெட் தேவை.. – சிவகார்த்திகேயன்

 

 

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்ற படமாக உருவானது.

இதை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி ஜோடியாக நடித்து இருந்தனர்.

இப்படம் வெளியாகி ₹ 200 கோடி வசூலை குவித்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சர்ச்சையும் உண்டானது.

‘ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், பிராமண பிரிவை சேர்ந்தவர். படத்தில் அது மறைக்கப்பட்டுவிட்டது’ என ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் அமரன் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“முகுந்த் வரதராஜனை இநதியன் – தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டுமே காட்ட வேண்டும் என அவரது பெற்றோரும், மனைவியும் கேட்டுக் கொண்டனர். எனவே தான் தமிழ் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பி சிவகார்த்திகேயனை தேர்வு செய்தேன்.

நிஜத்தில் முகுந்த் வரதராஜன் தன் அப்பாவை நைனா என்று அழைப்பார்.. எனவே அப்படி காட்சிகள் வைத்தேன்” என்று கூறினார்.

விழாவில் சாய் பல்லவி பேசும்போது.. ராஜ்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் பேசுவதற்கு நடுவில் நான் பேசுவது சரியாக இருக்காது.. அவர்கள் இருவரும் நன்றாக பேசுவார்கள்.

அமரனில் நடித்ததற்காக நான் மிகவும் சந்தோஷமாக கருதுகிறேன்.. படத்தைப் பார்த்து விட்டு நிறைய ரசிகர்களை ஒன்றுமே பேச முடியவில்லை.. அவர்கள் கட்டி அனைத்து பாராட்டினார்கள் அவர்களால் அழுகையை நிறுத்த முடியவில்லை.. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது” என்றார் சாய் பல்லவி.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

அமரன்’ வசூல் ரூ.150 கோடியை தாண்டிவிட்டது.. இன்னமும் வசூல் செய்யும் என்கிறார்கள். தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். ஆகையால் வசூல் முக்கியம் தான்.

நிறைய வசூல் செய்தால் மட்டுமே, இதுபோல படங்கள் எடுக்க முடியும்.. தயாரிப்பாளருக்கு தோன்றும். அதைத் தாண்டி எனக்கு வசூல் முக்கியம். பட்ஜெட் வேணும்.. என்னுடைய படங்களுக்கு பெரிய பட்ஜெட் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு பெரிய படங்களைக் கொடுக்க முடியும்..

மற்றப்படி இந்தப் படத்தை தாண்டிவிட்டேன், அந்தப் படத்தை தாண்டிவிட்டேன். என்பதை தலையில் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

இதுபோல பெரிய பட்ஜெட் படங்கள் எனக்கு கிடைப்பதற்கு காரணமான எனது முந்தைய படங்களின் குழுவினருக்கு நன்றி..

தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடத்துக்கு கண்டிப்பாக உண்மையாக இருப்பேன்.” என பேசினார் சிவகார்த்திகேயன்..

Sivakarthikeyan and Rajkumar speech at Amaran success meet