ட்ரெண்டிங் விமர்சனம்.. ரியாலிட்டியில் ஒரு ரீல்லாட்டம்
ட்ரெண்டிங் விமர்சனம்.. ரியாலிட்டியில் ஒரு ரீல்லாட்டம்
ஸ்டோரி…
அர்ஜுன் மீரா என்ற பெயரில் யூட்யூபில் மூன்று மில்லியன் சப்ஸ்கிரைப்ர்களை சேர்த்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வாழ்ந்து வருகின்றனர் கலையரசன் & பிரியாலயா.. இந்த வருமானத்தை நம்பி பெரிய வீட்டை லோன் எடுத்து விலைக்கு வாங்குகின்றனர்..
ட்ரெண்டிங்காக என்னென்ன விஷயங்கள் செய்து வைரல் ஆக்கலாம் என்பதே இவர்களின் வேலையாக இருக்கிறது.. ஒருநாள் இவர்களது யூடியூப் முடக்கப்படுகிறது.. இதனால் வருமானம் இன்றி லோன் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்..
அப்போது இவர்களுக்கு ஒரு மர்ப நபர் போன் செய்து ஒரு வாரத்திற்கு ஒரு கேம் ஷோ நடக்கும்.. அந்த ரியாலிட்டி ஷோவில் நீங்கள் கலந்து கொண்டால் கோடி கணக்கில் பணம் தருவதாக சொல்கிறார்.. எனவே இருவரும் அதற்கு சம்மதிக்கின்றனர்..
ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவே இவர்களுக்கு ஒரு போட்டியாக மாறி இவர்களுக்கு பல பிரச்சினைகள் உருவாக்குகிறது.. இறுதியில் என்ன ஆனது.? இவர்கள் நினைத்தபடி பணம் கிடைத்தது.? அந்த மர்ம நபர் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
கலையரசன், பிரியாலயா, பிரேம், பெசன்ட் நகர் ரவி..
படத்தில் 95 சதவீதம் கலையரசனும் பிரியா லயாவும் வருகிறார்கள்.. உதவி கேட்டு வரும் பிரேம் & லோன் பணம் கேட்டு வரும் பெசன்ட் நகர் ரவி இருவரும் 5% மட்டுமே..
படத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை விட கலையரசன் & ப்ரியா லயா இருவருக்கும் படத்திற்காக கொடுக்கப்பட்ட டாஸ்க் தான் சேலஞ்ச்.. காரணம் இருவர் மட்டுமே படத்தை ஆக்கிரமித்துள்ளனர்.. இருவரும் தங்களால் முடிந்தவரை மெனக்கெட்டு படத்தை நகர்த்தி இருக்கின்றனர்.. அது கலையரசனை ஓவர் டெக்ஸ் செய்திருக்கிறார் பிரியா லயா..
இடைவேளை வரை விறுவிறுப்பாக கதை சென்றாலும் அதன் பின்னர் இருவர் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது டாஸ்க் போதும் என்ற மனநிலை நமக்கு வந்து விடுகிறது..

டெக்னீசியன்ஸ்….
இசை : சாம் சி. எஸ்
ஒளிப்பதிவு : பிரவீன்பாலு
ஒரே வீடு… அந்த வீட்டிற்குள் உள்ள அறைகள்.. அங்கு நடக்கும் பிரச்சினைகள் என அனைத்தையும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்… கதைக்கு ஏற்ப பின்னணி இசையை கொடுத்து இருக்கிறார் சாம் சி. எஸ்..
இயக்கம் : சிவராஜ். என்
YouTube இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நம்பி அதில் வருமானத்தை ஈட்டி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.. சமூக வலைத்தளங்கள் ஒரு குடும்பத்திற்கு நுழைந்தால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்..
அதே சமயம் உணர்வுபூர்வமாக ஒரு குடும்பக் கதையாக சொல்லி இருக்கலாம்.. அதை விடுத்து அதை ட்ரெண்டிங் என்ற பெயரில் ஒரு மர்ம நபர் கேம் ஷோ நடத்துவதும் அவர் ₹2 கோடி கொடுப்பதும் நம்பும் படியாக இல்லை.. அவர் யார் அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான காட்சிகள் இல்லை..

அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற பதட்டத்துடன் காட்சிகளை இயக்குனர் நகர்த்தி இருந்தாலும் இறுதியில் அந்த நபர் யார்? பணம் எப்படி பெற்றார்கள்.? என்பதற்கான கேள்விகள் எழுகிறது..
பல குடும்பங்கள் சமூக வலைத்தளங்களால் சீரழிந்து வருவதையும்.. ரியாலிட்டி கேம் ஷோகளில் பாதிக்கப்படுவதையும் பிரேம் கேரக்டர் மூலம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்..
Trending movie review

