LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விமர்சனம்.. ஹை டெக் காதல் புரட்சி

LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விமர்சனம்.. ஹை டெக் காதல் புரட்சி

LIK லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விமர்சனம்.. ஹை டெக் காதல் புரட்சி

 

ஸ்டோரி…

2040 ஆம் ஆண்டில் நடக்கும் கதை இது.. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற மொபைல் ஆப் செயலியை நிர்வகித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.. அதில் ஒரு வாடிக்கையாளர் தான் நாயகி கீர்த்தி செட்டி..

செல்போன் உலகை தவிர்த்து பசுமை உலகத்தில் வாழ்ந்து வருகிறார் சீமான்.. இவரது மகன் பிரதீப் ரங்கநாதன்.. ஒரு கட்டத்தில் நாயகன் பிரதீப் நாயகி கீர்த்தி இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர்..

ஒரு கட்டத்தில் தந்தைக்குத் தெரியாமல் செல்போன் பயன்படுத்தும் பிரதீப் காதலில் விழுந்து அந்த லிக் செயலியை பயன்படுத்த அதுவே அவரை வாழ்க்கையில் பிரச்சனையாகிறது..

அதன் பிறகு நடந்தது என்ன..? காதலர்கள் கைகூடினார்களா? தொழில்நுட்பம் உதவி செய்ததா.? சீமான் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பக்கத்து வீட்டுப் பையனாக 90ஸ் கிட்ஸ் ஆக அனைவரையும் கவர்ந்து விடுகிறார் பிரதீப் ரங்கநாதன்.. தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து கொள்கிறாரா அல்லது கதைக்கு தன்னை பொருத்திக் கொள்கிறாரா.? எப்படி இருந்தாலும் தன் நடிப்பில் ஸ்கோர் செய்து பிரகாசிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் நாம் தமிழர் சீமான்.. தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் மனித உணர்வுக்கு மாற்றமில்லை.. அது தொழில்நுட்பத்தை சார்ந்து பயணிப்பதில்லை என்று பசுமையாக அறிவுரை செய்திருக்கிறார் சீமான்..

என்னதான் உலகம் பெரிது என்றாலும் சோசியல் மீடியா உலகத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண்ணாய் நாயகி கீர்த்தி.. நடிப்பில் படுச்சுட்டி.. அழகில் கொஞ்சம் மேக்கப் குறைத்து இருக்கலாம்..

2040 ஆம் ஆண்டில் இப்படி ஒரு ஹைடெக் மனிதர் இருக்கக்கூடும் என்பதை கேரக்டராக உணர வைத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா..

வித்தியாசமான தோற்றத்தில் வந்து ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் யோகி பாபு.. கவர்ச்சியான தோற்றத்தில் கிளுகிளுப்பை வருகிறாய் கௌரி..

பிரதீப் நண்பராக சாரா, நாயகி அம்மாவாக மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பழைய காலங்களை தாத்தா பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் வருங்காலம் எப்படி இருக்குமோ என்று நாம் நினைப்பதை தன் திரையில் கேமராவில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சாங்ஸ் ஓகே ரகம் தான்.. ஆனால் பல ஆண்டுகளுக்கு ஒலிக்காத ரகம்… பின்னணி இசையில் இளைஞர்களுக்கு துள்ளல் ரகம் கொடுத்திருக்கிறார் அனிருத்..

எடிட்டிங் செய்திருக்கிறார் பிரதீப் இ ராகவ்.. இடைவேளை வரை நம் பொறுமையை சோதிக்கிறது.. கிளைமாக்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம்..

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.. ஒரு பக்கம் தொழில்நுட்ப புரட்சியை தேடி ஓடிச் செல்லும் மனிதர்கள் மறுபக்கம் தொழில் நுட்பம் இல்லாத இயற்கையை தேடி செல்லும் மனிதர்கள். இவர்களுக்கு உள்ள உணர்வுகளை அழகாகவே சித்தரித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்..

தொழில் புரட்சி வந்து விட்டாலும் மனித உணர்வுகளுக்கு எதுவும் என்றும் ஈடாகாது என்பதையும் சொல்லி இருக்கிறார்..

ஆனால் ஹைடெக் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்…

 

Love Insurance Kompany movie review