மனிதன் தெய்வமாகலாம் விமர்சனம்… உள்ளத்தால் உயர்ந்த மனிதன்
மனிதன் தெய்வமாகலாம் விமர்சனம்… உள்ளத்தால் உயர்ந்த மனிதன்
ஸ்டோரி…
கதை நாயகன் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் குஷி ரவியை திருமணம் செய்து கொண்டு உணவகம் நடத்தி வருகிறார்..
கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென குஷி மரணிக்கிறார்.. மனைவியின் மரணம் இவருக்கு ஒரு மிகப்பெரிய சமூகப் பொறுப்பை கொடுக்கிறது.. அதன் பிறகு நடந்தது என்ன.? இவர் எப்படி தெய்வமானார்.? அவர் செய்த சம்பவம் என்ன.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
எளிமையான கதை.. எதார்த்தமான பதிவு அதை எளிய மனிதராக வாழ்ந்து யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் செல்வராகவன்.. அலட்டிக் கொ(ல்லாத நடிப்பில் கவர்ந்திருக்கிறார்..
கௌசல்யா.. செல்வாவின் அக்கா கேரக்டரில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இவரின் கணவராக கணவராக சதீஷ்..
நாயகியாக குஷி ரவி.. அழகிலும் நடிப்பிலும் குஷிப்படுத்துகிறார்..
கந்து வட்டி மனிதராக மைம் கோபி.. பெரும்பாலும் கந்துவட்டி கொடுப்பவர்களை கொடூரமாக காட்டுகிறார்கள்.. தன் தேவைக்காக கந்து வட்டி என்று தெரிந்தும் அந்த வாங்கிவிட்டு கடனை அடைக்காத ஏமாற்று மனிதர்களை யாரும் கொடுமையானவர்களாக சித்தரிப்பது இல்லை.. அது ஏனோ..?
இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
ரவிவர்மா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஹைடெக் தொழில்நுட்பம் வந்து விட்டாலும் இன்னும் அடிப்படை வசதி கூட இல்லாத கிராமங்கள் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக தன்னுடைய கேமராவில் அழகாக பதிவு செய்திருக்கிறார்..
ஏகே பிரியன் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது..
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார்.. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம், கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட அனைத்தையும் கலந்து அதில் வாழும் ஒரு மனிதன் எப்படி உயர்ந்த நிலைக்கு செல்கிறான் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
Manithan Deivamagalam movie review

