காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்.. கெத்து காட்டு திருடன்… வெத்து வேட்டு போலீஸ்

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்.. கெத்து காட்டு திருடன்… வெத்து வேட்டு போலீஸ்

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்.. கெத்து காட்டு திருடன்… வெத்து வேட்டு போலீஸ்

 

ஸ்டோரி…

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் உள்ள ஜெயிலில் தலைமை காவலராக பணிபுரிகிறார் முனிஷ்காந்த்.. இவரது அசிஸ்டன்ட் நாயகன் சுபாஷ் செல்வம்..

தன் கைப்பட புத்தகங்கள் எழுதி அதை சிறை கைதிகளுக்கு கொடுத்து படிக்கச் சொல்லி அவர்களை திருத்தும் நல்ல எண்ணம் கொண்டவர் முனிஷ்காந்த்..

இந்த சிறைச்சாலையில் அம்மன் கோயிலை சார்ந்த உண்டியல் வைக்கப்படுகிறது..

இப்படியான சூழ்நிலையில் அந்த ஜெயிலில் உள்ள உண்டியல் திருடப்படுகிறது..

காவலர்கள் நிரம்பி இருக்கும் சிறைச்சாலைக்குள் ஒரு திருடன் உண்டியலை திருடி சென்றான் அது வெளியே தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்பதை மூடி மறைக்க போலீஸ் பார்க்கிறது.

இந்த சூழ்நிலையில் கோயில் சம்பந்தப்பட்டவர்கள் வருகின்றனர்.. அதன் பிறகு போலீஸ் என்ன செய்தனர்.. நிஜமான திருடன் யார்.? வெளியில் வந்த திருடனா.? அல்லது சிறைச்சாலைக்குள் இருக்கும் திருடனா.? உண்டியலை திருடியது யார் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

கைதிகள் திருந்தி வாழ வேண்டும்.. புத்தகம் படித்து வாழ்ந்தால் தவறுகள் குறையும் என்ற கொள்கையோடு வாழ்கிறார் ஜெய்லர் முனீஸ்காந்த்.. அதேசமயம் சின்ன சின்ன இடைவெளியில் கூட அவரது ஒன் லைன் காமெடி கைத்தட்டலை அள்ளும்..

சுபாஷ் செல்வம்.. புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ் விறுவிறுப்பாக காணப்படுவார். அந்த விறுவிறுப்பு இவரிடம் உள்ளது.. அதே சமயம் கொஞ்சம் காமெடியும் கலந்து தன் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார் சுபாஷ்.. அவருக்கு சபாஷ் போடலாம்..

மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன்.. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல இவரை நினைக்க தோன்றும்.. ஆனால் வெள்ளந்தியாக இருந்து கொண்டு இவர் அடிக்கும் கொள்ளைகள் வேற லெவல் ரகம்..

நாயகிகளாக வின்சு ஷாம் மற்றும் கெளதமி.. இருவரும் நடிப்பில் கெட்டி.. ஒருவர் சுபாஷுக்கு ஜோடி.. ஒருவர் ராஜேஷுக்கு ஜோடி.. இருவரும் அழகிலும் நடிப்பிலும் ஈர்க்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர், படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு ஆகியோரின் பணி சிறப்பாக அமைந்திருக்கிறது..

ஆனால் எடிட்டர் 4 எபிசோடுகளில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் அல்லது காட்சிகளை கத்தரி போட்டு இருக்கலாம்.. இந்த படத்தின் கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமலே குழப்பமான மனநிலை காணப்படுகிறது..

எல்லா திருடர்களும் வறுமைக்காகவும் பிழைப்புக்காகவும் திருடுவதில்லை.. சிலர் கெத்து காட்டுவதற்காகவும் திருடக்கூடும் என்பதையும் திருடர்களை கூட எளிதாக கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் இவர்களை கண்டுபிடிப்பது தான் கஷ்டம் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..

இந்தப் படத்தின் போஸ்டர்களில் சீரியஸ் போலீஸ் சில்லறை திருடன் என்று சொல்லப்பட்டாலும் சீரியஸ் திருடன் சிரிப்பு போலீஸ் என்று கூட சொல்லி இருக்கலாம்.. போலீசை விட திருடன் படம் முழுவதும் கெத்து காட்டி இருக்கிறார்..

 

Kaakee Circus web series review