Mr X மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்…

Mr X மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்…

Mr X மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்…

 

ஸ்டோரி…

ஆர்யா – கௌதம் ராம் கார்த்திக் – சரத்குமார் – மஞ்சு வாரியர் ஆகியோரை வைத்து சர்வதேச அளவில் இந்திய உளவாளிகள் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

இந்தியாவின் உளவுப்பிரிவு ‘ரா’-வில் பணியாற்றுகிறார் சரத்குமார், அணு ஆயுத மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக இமயமலையில் பாதுகாத்து வருகிறார்.

சரத்குமாரை கைது செய்து அவர் வைத்திருக்கும் மூலப் பொருளையும் கைப்பற்றுகிறது ரஷ்ய ராணுவம்..

சரத்குமார் மீட்க வருகிறார் ஆபிசர் மஞ்சு வாரியார்..

அணு ஆயுத பேரழிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர் வில்லன் கௌதம் ராம் கார்த்திக் டீம்… அதற்கு எதிராக இந்திய உளவாளி ஆர்யா எதிர்த்து போராடுகின்றனர். இறுதியில் வென்றது யார்.? மிஸ்டர் எக்ஸ் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

– Arya – Gautham
– ⁠Gautham Ram Karthik – Amaran
– ⁠Sarath Kumar – Parameshwar
– ⁠Manju warrier – Indira Verma
– ⁠Anagha – Keerthana
– ⁠Athulya – Aditi
– ⁠Raiza Wilson – Nirmala
– ⁠Kali Venkat – Ponnuswamy
– ⁠Jayaprakash – Vamanamoorthy

ஆர்யாவின் அறிமுக காட்சியே அசத்தல்.. தண்ணீருக்கு அடியில் இருந்து கம்பீர உடலால் நீரை கிழித்துக்கொண்டு அவர் வெளியே வரும் சீன் மாஸ்.. இந்திய உளவுப்பிரிவு அதிகாரி கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் ஆர்யா.

 

ஆர்யாவுக்கும் அனகாவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது..

இதுவரை ஏற்காத கேரக்டரில் கௌதம் ராம் கார்த்திக்.. இவரும் உடலை வருத்தி சிக்ஸ்பேக் காட்டி ரசிகர்களை மிரள வைக்கிறார்.. நடிப்பில் அசத்தியிருக்கிறார்

மஞ்சு வாரியரின் கேரக்டர் ஆக்சன் இல்லை என்று நினைக்கையில் கிளைமாக்ஸ் இல் அதிரடி ஆட்டம் காட்டி இருக்கிறார்..

சரத்குமார் ஜெயப்பிரகாஷ் காளி வெங்கட் ஆகியோர் தங்கள் கேரக்டர் மூலம் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர..

அதுல்யா ரவி மற்றும் ரைசா வில்சன் உள்ளிட்டோரும் ரசிகர்களை நடிப்பில் கவர்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

*WRITTEN & DIRECTED BY*
Manu Anand

*PRODUCED BY*
Shri Vineet Jain | S Lakshman Kumar

*MUSIC*
Dhibu Ninan Thomas

திபு நினன் தாமஸ் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளார்.. இசையில் கூட பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார்..

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் கேமரா கோணங்களில் வித்தை காட்டியிருக்கிறார்…

எடிட்டர் பிரசன்னா .. கத்தரி போட்டு விறுவிறுப்பை கூட்டிருக்கலாம்..

*CINEMATOGRAPHY*
Arul vincent

*EDITOR*
Prasanna GK

*ACTION CHOREOGRAPHY*
Stunt Silva

*ART*
Indulal kaveed | Sekar B

*COSTUME DESIGN*
Uthara menon | Deepali noor

*PRO*
John

 

முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை ஒரு கட்டத்தில் தான் ஜெட் வேகம் எடுக்கிறது.. சரத்குமாரை தன்னால் மீட்க முடியாமல் ஆர்யாவை அனுப்ப மஞ்சு வாரியர் போடும் ஸ்கெட்ச் ரசிக்க வைக்கிறது.

அணு ஆயுதங்களால் உலக மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்த நினைக்கும் ஒரு கூட்டம்… அதற்கு எதிராக தேசபக்தியுடன் எப்பொழுதும் மக்களுக்கு துணையாக நிற்கும் சக்தி வாய்ந்த உளவாளிகள் கூட்டம்..

இவர்களுக்கான போர் சூழலை பிரம்மாண்டமாக கொடுத்து ரசிகர்களை பல காட்சிகளை மெய்சிலிர்க்க வைக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.. இத்துடன் கமர்சியல் விருந்துக்காக குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் இணைத்து இருக்கிறார்..

ஆனால் பல இடங்களில் லாஜிக் மீறல்கள்.. பிரம்மாண்டத்தை காட்டும் இவர் இன்னும் பல அதிகாரிகளை காட்டி இருக்க வேண்டும்.. ஆனால் 5 – 6 பேரை சுற்றிய கதை நகர்வதை குறைத்து இருக்கலாம்..

 

Mr X movie review