சரத்குமார் 150 – ஸ்மைல் மேன் விமர்சனம்..

சரத்குமார் 150 – ஸ்மைல் மேன் விமர்சனம்..

 

 

சரத்குமார் 150 – ஸ்மைல் மேன் விமர்சனம்..

 

ஸ்டோரி…

சிபிசிஐடி அதிகாரி சரத்குமார்.. ஒரு கட்டத்தில் ஞாபக மறதி அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார்.. எனவே பணியில் இருந்து விலகி ஓய்வு எடுக்கிறார்.. இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன்பு நடந்த ‘ஸ்மைல் மேன்’ சீரியல் கொலைகள் போல மீண்டும் நடக்கிறது.

இதனிடையில் சீரியல் கொலைகள் பற்றி ஒரு புத்தகம் வெளியிடுகிறார் சரத்குமார்.. அதில் ஸ்மைல் மேன் கொலை பகுதியை மட்டும் நிறைவு பெறாமல் புத்தகத்தை எழுதுகிறார்..

புதிதாக வந்த அதிகாரி ஸ்ரீகுமார் அந்த வழக்கு விசாரணையை நடத்த அவருக்கு துணையாக மீண்டும் சரத்குமாரை அழைக்கின்றனர்.. முதலில் மறுக்கும் சரத்குமார் பின்னர் வேறு பழைய கொலைகளை தொடர்ந்து நடக்கும் இந்த கொலைகளையும் விசாரிக்க வருகிறார்.

சரத்குமார் ஓய்வில் இருக்கும் போது நடக்காத கொலைகள் சரத்குமார் புத்தகம் வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் நடப்பதன் மர்மம் என்ன என சந்தேகிக்கிறார் ஸ்ரீகுமார். அதன் பிறகு என்ன நடந்தது?உண்மையான கொலையாளி யார்? ஸ்மைல் மேன் நோக்கம் என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சரத்குமாருக்கு இது 150 வது படம்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. கில்லர் யார் யார் என்ற வேகத்துடன் திரைக்கதை நகர்கிறது.. ஆனால் கில்லர் இவர் தான் என்று தெரிந்த பின் சுவாரஸ்யம் குறைந்து திரைக்கதையின் வேகம் குறைகிறது.. சில நேரங்களில் சரத்குமார் மீதும் சந்தேகம் வருகிறது..

வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ஸ்ரீகுமார், அவருடைய உதவியாளர்களாக சிஜா ரோஸ், ராஜ்குமார்..

பல தமிழ் படங்களில் புடவை கட்டி அழகு பெண்ணாக வந்த சிஜா ரோஸ் இதில் மாடர்ன் லுக்கில் கவர்கிறார்..

காமெடி என்ற பெயரில் CID ஆக கடுப்பேற்றி இருக்கிறார் ராஜ்குமார்..

சரத்குமாருக்கு உதவி செய்யும் குமாஸ்தாவாக ஜார்ஜ மரியான். பிளாஷ்பேக்கில் இனியா, பேபி ஆலியா உள்ளிட்டோரம் உண்டு இனியா கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்.. கலையரசன் கேரக்டர் கவனம் பெறுகிறது..

 

டெக்னீசியன்ஸ்…

இரவு நேர காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் லைட்டிங் ஜொலிக்கிறது.. கவாஸ்கர் அவினாஷ் திரில்லர் படத்திற்கான வேகத்தை பின்னணி இசையில் கொடுத்திருக்கிறார்..

தயாரிப்பு – மேக்னம் மூவிஸ்

இயக்கம் – ஷியாம் & பிரவீன்

தனக்கு ஏற்பட்ட வலியை ஸ்மைல்லாக மாற்றி ஸ்மைல் கொலைகளை செய்கிறார் சீரியல் கில்லர்.. ஆனால் அதற்கு வலுவான காரணங்கள் இல்லை என்பது வருத்தமே..

இடைவேளை வரை இருந்த விறுவிறுப்பை சீரியல் கில்லர் யார் என்ற தெரிந்த பின்னரும் வைத்து இருந்தால் இந்த ஸ்மைல்மேன் ரசிகர்களையும் ஸ்மைல் மேனாக மாற்றி இருக்கும்..

Smile man movie review