நல்லகண்ணு 100 : WFH அரசியல்வாதி விஜய்.; நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் & சௌந்தரராஜா
நல்லகண்ணு 100 : WFH அரசியல்வாதி விஜய்.; நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் & சௌந்தரராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு டிசம்பர் 26 அன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது..
அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. ‘இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது’ என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நல்லகண்ணு அவர்களை வாழ்த்தி சிலர் நேரிலும் சந்தித்து ஆசி பெற்றனர்.
சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்தி பதிவிட்டு இருந்தார்.. இது நாள் வரை நல்லகண்ணு அவர்களை வாழ்த்தாத விஜய் தற்போது அரசியல் களம் கண்ட பிறகு வாழ்த்துவதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.. மேலும் நல்லக்கண்ணு வை சந்திக்காமல் வீட்டிலிருந்தே அரசியல் (Work from Home Politician) செய்து வருகிறார் விஜய் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சௌந்தரராஜா உள்ளிட்டோர் நல்லகண்ணு அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வாழ்த்தி வந்தனர்..

நல்லகண்ணு பற்றி ஒரு பார்வை :
——————————————————-
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் என்பவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.
“என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். ஆனால் ’18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்’ என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்” என நல்லகண்ணு ஒரு முறை தெரிவித்து இருக்கிறார்..
“பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு தான் கம்யூனிஸ்ட்டாக மாறினாராம்.
திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தி உள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை வாழ்க்கையில் வாழ்ந்தவர் நல்லகண்ணு.
Nallakannu 100th birthday Vijay Absent Sivakarthikeyan and Soundararaja present



