சீசா விமர்சனம்.. 3.25/5.. சிறப்பு
சீசா விமர்சனம்.. 3.25/5.. சிறப்பு
ஸ்டோரி…
நாயகன் நிஷாந்த் ரூசோ.. நாயகி பாடினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . நிஷாந்த்துவும் மருத்துவமனையில் வேலை செய்யும் மூர்த்தியும் நண்பர்கள்..
அப்பா இறந்த பிறகு அந்த கம்பெனி நிர்வகிக்கும் பொறுப்பை பெறுகிறார் நிஷாந்த்.. இடையில் அவருக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது.. இதனால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார் மனைவி பாடினி.
இந்த சூழலில் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் காணாமல் போகின்றனர்.. இவர்கள் வீட்டில் வேலைக்காரனும் கொலை செய்யப்படுகிறான்.. இதனைப் பார்க்கும் டிரைவர் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க போலீசார் தீவிர விசாரணை இறங்குகின்றனர்.
போலீசார் நட்டி நடராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா இருவரும் விசாரணையில் என்னென்ன தெரிந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஹீரோ மனநிலை பாதிக்கப்பட்டதால் ஹீரோவின் நண்பர் நாயகியுடன் கள்ள உறவு கொண்டாரா? அதை தெரிந்து வேலைக்காரன் கொலை செய்யப்பட்டானா? என்றும் விசாரணையில் போலீசார் இறங்குகின்றனர்.. இறுதியில் என்ன விடை கிடைத்தது என்பதுதான் கதை..

கேரக்டர்ஸ்…
நட்டி & ஆதேஷ் பாலா இருவரும் மிடுக்கான போலீஸ் உடையில் கவர்கின்றனர்.. இவர்கள் விசாரிக்கும் விதமும் அது காட்சிப்படுத்திருக்கும் விதமும் படத்திற்கு பலம்.. சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர்..
நாயகன் நிஷாந்த் கொடுத்த பாத்திரத்தில் ஆட்டம் பாட்டம் என கவர்கிறார்.. முக்கியமாக சிவன் பாட்டுக்கு போடும் ஆட்டம் & மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் ஓகே ரகம்.. ஆனால் நிறைய காட்சிகளில் ஓவர் மேக்கப் குறைத்திருக்கலாம்.. நாயகியாக பாடினி அழகாக வந்து அளவான நடிப்பில் ஓகே..
டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் சரண்குமார்.. பாடல்களை விட பின்னணி இசையை நிறைவாக கொடுத்திருக்கிறார்..
ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன்.. ஒளிப்பதிவில் இவர்களின் பங்கு பாராட்டுக்குரியது..
படத்தொகுப்பாளர் : வில்சி ஜெ.சசி
கொலையாளி யார்? கொலைக்கான காரணம்? என்று தேடுதல் வேட்டையில் ஆன்லைன் கேம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.. இதன் மூலம் ஒருவர் பாதிக்கப்படுவதால் மற்ற குடும்பத்தினரும் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை அழுத்தமாக பதிவு இருக்கிறார் இயக்குனர் குணா.
தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார், சிறிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் குணா சரமணியம் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிரைம் திரில்லர் ஜானரில் படமாக்கி இருக்கிறார்.. சமூக கருத்து மட்டும் இல்லாமல் கமர்சியலுடன் கலந்து கலர்ஃபுல்லான காதலையும் சொல்லி இருக்கிறார்..
Seesaw movie review

