எக்ஸ்ட்ரீம் விமர்சனம்.. 3.75/5.. எக்ஸ்ட்ரீம் திரில்லர்

எக்ஸ்ட்ரீம் விமர்சனம்.. 3.75/5.. எக்ஸ்ட்ரீம் திரில்லர்

 

எக்ஸ்ட்ரீம் விமர்சனம்.. 3.75/5.. எக்ஸ்ட்ரீம் திரில்லர்

 

ஸ்டோரி…

திரில்லர் கதைகளில் ஒரு கொலை நடக்கும்.. அந்த கொலையாளி யார்? அதன் பிளாஷ்பேக் என்ன? என்பதுதான் பல படங்களில் கதைக்களமாக இருக்கும்.இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல..

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு வீடு கட்டும் பில்லரின் அபி நட்சத்திரா கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கிறார். அவள் ஒரு அப்பார்ட்மெண்டில் வேலை செய்து வருவதை அறியும் போலீசார் ராஜ்குமார் & ரக்சிதா தீவிர விசாரணை இறங்குகின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் மீதிகதை..

 

 

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

ராஜ்குமார் நாகராஜ், ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா மூவரும் படத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக அருமையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

காவல்துறைக்கு உரிய கம்பீரமான தோற்றத்தில் ராஜ்குமார் ரக்ஷிதாவும் கலக்கி இருக்கின்றனர்.. காவல்துறை அதிகாரியாக அழகாக மிடுக்காக உடல் மொழியிலும் ஜொலித்திருக்கிறார் ரக்ஷிதா மகாலட்சுமி.. இந்த அழகான ஆக்சன் நாயகியை சினிமா இயக்குனர்கள் கவனிக்கவில்லையோ? டிவி சீரியல் இயக்குனர்கள் மட்டுமே கவனிக்கிறார்களோ என்னவோ.?

தயாரிப்பாளர் ராஜ்குமார் நாம் தமிழர் கட்சி சீமானின் ஜெராக்ஸ் காப்பியாகவே தெரிகிறார்.. அப்படி ஒரு பொருத்தம்..

அபி நட்சத்திரா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. ஓரிரு காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார்..

தயாரிப்பு – சீகர் பிக்சர்ஸ்

சென்னை திருமுல்லைவாயல் பகுதிகளை யதார்த்தத்துடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டிஜே பாலா.

இசை – ராஜ்பிரதாப்.. பின்னணி இசை படத்திற்கு பேரு உதவியாக இருந்திருப்பதை உணர முடிகிறது..

இயக்கம் – ராஜவேல் கிருஷ்ணா.. இவர் பிழை மற்றும் தூவல் ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார் தற்போது மூன்றாவதாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா. இவர் இயக்கிய மூன்று படங்களுமே வித்தியாசமான கதைகளைக் கொண்டது சிறப்பு.

ஒரு திரில்லர் படத்திற்கான உரிய அனைத்து விஷயங்களையும் அழகாக திரில்லர் உணர்வுடன் கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக போலீஸ் சந்தேகப்பார்வையில் அனைவரும் குற்றவாளிகள் தான்.. போலீஸ் சந்தேகத்துடன் பார்ப்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.. அதில் ரக்ஷிதா & ராஜ்குமார் நாகராஜ் ஆகியோரின் பங்களிப்பு அருமை..

நாகரிக பெண்களின் ஆடையில் மாற்றம் தேவையா தேவையில்லையா என்பதையும் ஒரு விவாத பொருளாகவே அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.. ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடையால் சபலப்படும் ஒரு ஆண் அவளிடம் தன்னுடைய வீரத்தை காட்ட முடியாமல் சிறுமிகளிடம் வீரத்தை காட்டுவதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..

கொலையாளி யார்? காரணம்? யார்? என்ற தேடுதல் வேட்டையில் யாரும் எதிர்பாராத வகையில் கிளைமாக்ஸ் முடித்து படத்தை சுவாரசியமாக தந்திருக்கிறார்.

படத்தில் காதல் ஜோடிகள் இருக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் அம்ரீதா பொறுப்பான காதலனாக அனந்த் நாக் நடித்துள்ளனர்.. ஆனால் அவர்கள் மூலமும் ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

குற்றம் செய்தவர்கள் அதிகாரத்தில் வர்க்கத்தில் இருப்பவர்கள் எப்படி வேணாலும் ஒரு விசாரணையை திசை திருப்பலாம் என்பதையும் அந்த குற்றவாளிகள் நம்மில் ஒருவராக இருக்கலாம் என்பதையும் எச்சரிக்கையாக பதிவு செய்து இருக்கிறார்..

இதுபோல எக்ஸ்ட்ரீம் குற்றங்களுக்கு எக்ஸ்ட்ரீம் தண்டனை தேவை என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜவேல்.

ஆக எக்ஸ்ட்ரீம்.. எக்ஸ்ட்ரீம் திரில்லர்

Xtreme movie review