ஸ்கூல் விமர்சனம்… பேய் பள்ளியில் மிரட்டல் அட்வைஸ்
ஸ்கூல் விமர்சனம்… பேய் பள்ளியில் மிரட்டல் அட்வைஸ்
ஸ்டோரி…
ஒரு தனியார் பள்ளியில் பிரின்ஸ்பால் ஆக பகவதி பெருமாள் பணிபுரிகிறார்.. இவர் மைண்ட் செட் ஆப் சக்சஸ் என்ற புத்தகத்தை எழுதி அங்கு உள்ள மாணவர்களுக்கு கொடுத்து படிக்க சொல்கிறார்.. இதனை படிக்கும் மாணவர்கள் தவறான வழிக்கு செல்லவே அங்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
பணக்காரர்கள் மட்டுமே பெரியவர்கள்.. என்று தவறான கருத்துக்கள் அந்த புத்தகத்தை அடங்கியிருப்பதால் தாழ்வு மனப்பான்மையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இந்தப் பள்ளியை அழிக்க ஒரு நபர் காண்ட்ராக்ட் கொடுக்கிறார்.. இந்த கான்ட்ராக்ட்டை எடுக்கும் ‘மஸ்தான்’ நிழல்கள் ரவி தற்கொலை செய்த மாணவர்களை வைத்து ஆவியாக ஏவி விட்டு மீண்டும் பிரச்சனை செய்கிறார்..
இதனையடுத்து அந்தப் பள்ளியில் ஏற்கனவே பணிபுரிந்த யோகி பாபு & பூமிகா ஆகியோரை வரவைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த நிர்வாகம் கட்டளை இடுகிறது.. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தீய சக்திகளை ஒழிக்க சாமியார் உலகநாதன் வித்யாதரன் வருகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? மாணவர்களை நல்வழிப்படுத்தினார்களா ஆசிரியர்கள்.? பள்ளியின் நிலைமை என்ன ஆனது.? ஆசிரியர்களின் நிலை என்ன?மாணவர்களின் நிலை என்ன? என்பதுதான் மீதிக்கதை..
நடிகர் & நடிகைகள் :
யோகி பாபு – கனகவேல்
பூமிகா சாவ்லா – அன்பரசி
கே எஸ் ரவிக்குமார்- இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன்
பகவதி பெருமாள் (பக்ஸ்)- பிரின்ஸ்பால் நம்பிராஜன்
சாம்ஸ் – அசிஸ்டன்ட் பிரின்ஸ்பால் மன்மதன்
நிழல்கள் ரவி – மஸ்தான்
ஆர்.கே வித்யாதரன்- உலகநாத சுவாமி
பள்ளி கட்டிடத்தை பெரிய அளவில் காட்டினாலும் பள்ளி மாணவர்கள் குறைந்த அளவிலே காணப்படுகிறார்கள்.. முக்கியமாக யோகிபாபு ஹேர்ஸ்டைல் ஒரு ஆசிரியருக்கு அழகா.? அது மட்டுமில்லாமல் அவர் சகட்டுமேனிக்கு சக ஆசிரியர்களை திட்டுவது சரியா.?
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பூமிகா.. அழகாக வந்து அளவான நடிப்பை கொடுக்கிறார்.
இஸ்லாமிய மஸ்தானாக வரும் நிழல்கள் ரவி ஓவர் ஆக்டிங்கில் வெறுப்பேற்றுகிறார்..
சாமியார் உலகநாதனாக வித்யாதரன் நடித்திருக்கிறார்.. இவரது நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது..
பக்ஸ் மற்றும் சாம்ஸ் இருவரும் ஆசிரியர்களாக வந்து சிரிக்கவும் வைத்துள்ளனர்.. கூடவே இரண்டு பெண் ஆசிரியர்கள் அழகில் கவர்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை மற்றும் பாடல்கள் – இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : ஶ்ரீதர்
இணை தயாரிப்பு : K. மஞ்சு
தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.
இயக்கம் : R.K. வித்யாதரன்.
பள்ளியில் ஜாதி மதம் பேதம் இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஸ்கூல் படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வித்யாதரன்.. இடைவேளை வரை பேய் என அலறவிட்ட இயக்குனர் பின்னர் அட்வைஸ் செய்து நம்மை அலற விட்டிருக்கிறார்..
இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தாலும் படத்தின் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை..
பின்னணி இசை மட்டும் ஓகே ரகம்.. ஆனால் பேய் படத்திற்கு உரிய எந்த ஒரு பயமும் வரவில்லை..
முக்கியமாக ஆவியாக வருபவர்களுக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு இருக்கலாம்.. ஆவிகள் கூட நார்மலாக வருவதால் எந்தவித பயமும் நமக்கு வரவில்லை..
மாணவர்கள் பாஸ் பெயில் என்பதை விட அவர்களுக்கு Experience and Contribution வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர்.. அதற்கு EC என்ற சுருக்கமாக சொல்லி I AM ENOUGH என்று வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. எப்போதும் என்ற மனமே சிறந்தது என்று அட்வைஸ் செய்து இருக்கிறார்..
ஆக ஸ்கூல்… பேய் பள்ளியில் மிரட்டல் அட்வைஸ்
School movie review

