ஏஸ் விமர்சனம் 3.5.. காமெடியில் அலப்பறை.. ஆக்க்ஷனில் அனல்

ஏஸ் விமர்சனம் 3.5.. காமெடியில் அலப்பறை.. ஆக்க்ஷனில் அனல்

 

ஏஸ் விமர்சனம் 3.5.. காமெடியில் அலப்பறை.. ஆக்க்ஷனில் அனல்

 

ஸ்டோரி…

மலேசியாவுக்கு வேலை தேடி செல்கிறார் விஜய் சேதுபதி.. அங்கு அவரது உறவினர் யோகி பாபு உடன் தங்கி கொண்டு வேலை பார்த்து வருகிறார்.. இதனிடையில் நாயகி ருக்குமணியை சந்தித்து அவர் மீதும் காதல் கொள்கிறார்.

ஆனால் நாயகிக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை.. எனவே தன் காதலியை கடனில் இருந்து மீட்க சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதி..

இவர் ஒரு கட்டத்தில் ஜெயித்தாலும் இவருக்கு பணம் தர மறுக்கிறார் வில்லன் அவினாஷ். எனவே இருவருக்கும் மோதல்.. அவரை அடித்துப் போட்டு விட வில்லன் கும்பல் இவரை துரத்துகிறது..

மேலும் தன் காதலிக்கு உதவ பிரபல வங்கியில் பெரும் தொகையை கொள்ளையடிக்கிறார்.

இதனால் ஒரு பக்கம் வில்லன் துரத்த மறுபக்கம் போலீஸ் துரத்த என்ன செய்தார் விஜய் சேதுபதி.? காதலியை கடனில் இருந்து மீட்டாரா.? யோகி பாபுவுக்கு என்ன பிரச்சனையானது? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

எதார்த்த நாயகனாக விஜய் சேதுபதி.. ரொமான்ஸ் செய்வதை விட ஆக்ஷன் மற்றும் காமெடியில் கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி..

பல படங்களில் கவுண்டமணியை செந்தில் போட்டுக் கொடுத்து அடி வாங்க வைப்பது போல இந்த படத்தில் விஜய்சேதுபதியை மாட்டி விடும் கேரக்டரில் கலகலப்பாக இருக்கிறார் யோகி பாபு.. ஆண்டவன் கட்டளை படத்திற்குப் பிறகு இந்த படத்தின் இவர்கள் காமெடி களைக் கட்டியிருக்கிறது..

அவினாஷ் & பப்புலு வில்லன்களிடம் சிக்கி யோகிபாபு அடிவாங்கும் காட்சிகளில் சிரிப்பால் வயிறு குலுங்குகிறது.

எதார்த்த நடிப்பாலும் அழகாலும் வசீகரிக்கிறார் ருக்மணி வசந்த்.. திவ்யா பிள்ளை சிறப்பான அறிமுகம்.. இனி இவருக்கும் வாய்ப்புகள் குவியும்..

டெக்னீசியன்ஸ்…

தனியாளாக பேங்க் பணத்தை விஜய் சேதுபதி கொள்ளை அடிப்பதெல்லாம் நம்பவே முடியாத ஓவர் கற்பனை.. இதுபோல சில லாஜிக் மீறல்களை இயக்குனர் ஆறுமுககுமார் தவிர்த்து இருக்கலாம்.. மற்ற லாஜிக் மீறல்களில் காமெடி இருப்பதால் அதை ரசிக்க முடிகிறது..

கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகள் மலைக்க வைக்கின்றன.. ‘உருகுது.. உருகுது…. பாடல்.. வழக்கம் போல ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருக வைக்கிறது..

சாம் சி.எஸ். இசை பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறது.. இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது..

எங்களுக்கு லாஜிக் வேண்டாம்.. சிரிக்க ரசிக்க ஒரு படம் போதும் என்பவர்கள் ஏஸ் படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்.. முக்கியமாக விஜய்சேதுபதி & யோகிபாபு மற்றும் வில்லன் அவினாஷ் வின் காமெடி வேற லெவல்..

ஆக்ஷன் சீன்களில் அனல் பறக்கிறது..

இயக்குனர் ஆறுமுககுமார் தயாரித்தும் இருக்கிறார்..

 

Vijaysethupathis Ace movie review