சட்டம் என் கையில் விமர்சனம்.. நீதி போராட்டம்

சட்டம் என் கையில் விமர்சனம்.. நீதி போராட்டம்

 

சட்டம் என் கையில் விமர்சனம்.. நீதி போராட்டம்

30 வருடங்களுக்கு முன்பு சட்டம் என் கையில் என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது.. அது மட்டும் இல்லாமல் இதே 2024 ஆம் ஆண்டிலும் சட்டம் என் கையில் என்ற ஒரு படமும் வெளிவந்திருக்கிறது..

எனவே இந்த பட டைட்டில் கீழே ஆங்கில சப் டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஸ்டோரி…

ஓர் இரவு நேரத்தில் ஏற்காடு பகுதியில் காரில் டென்ஷனாக தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்.

அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவன் திடீரென பைக்கில் குறுக்கே வர அவர் மீது இடித்து விடுகிறார்.. அந்த ஸ்பாட்டிலேயே அந்த டூவீலர் நபர் இறந்து விடுகிறார்.. எனவே அவரை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு வேறு ஒரு இடத்தில் தூக்கி எறிய முற்படுகிறார் சதீஷ்.

அந்த காட்டுப்பகுதியில் போலீசார் இரவு சோதனையில் ஈடுபடும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டி அடித்து பிரச்சனை செய்த சதீசை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர்..

கடுப்பான போலீஸ் பாவல் பல குற்ற வழக்குகளை சதீஷ் மீது போட துணிகிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது.? சதீஷ் என்ன செய்தார்.? காவல்துறையிடம் தப்பித்தாரா?என்பதுதான் மீதிக்கதை.

 

 

கேரக்டர்ஸ்..

Cast : Sathish, Ajay Raj, Pavel Navagethan, Mime Gopi, Rithika, Kpy Sathish, Venba, Vidhya Pradeep, Bava Chelladurai, Ramdoss,

ஈகோ திமிரில் மோதிக் கொள்ளும் போலீசாக பாவல் நவநீதன் மற்றும் அஜய்ராஜ்.. இடைவெளி வரை சதீஷை டம்மி செய்து இவர்கள் இருவரும் நடிப்பில் கவர்கின்றனர்.. இவர்களில் யார் நல்லவர்? கெட்டவர் என்று தெரியாத அளவுக்கு பெஸ்ட் நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

இடைவேளை வரை அடக்கி வாசித்த சதீஷ் இடைவேளைக்குப் பிறகு கதையின் நாயகனாக மாறி இருக்கிறார்.. போலீசுக்கு தன் மீது சந்தேகம் வராதபடி இவர் செய்யும் ஒவ்வொன்றும் ரசிக்கும் ரகம். இரண்டு மூன்று நாயகிகள் இருந்தும் சதீஷுக்கு ஒருவரும் ஜோடி இல்லையே

க்யூட் லேடி போலீசாக வெண்பா.. இவருக்கு வேறொருவர் டப்பிங் கொடுத்திருப்பார் போல.. ஏன் நண்பா என்னாச்சு..?

போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பாவா செல்லதுரை, ராமதாஸ் உள்ளிட்டோர் எதார்த்த போலீசாக கவனிக்க வைக்கின்றனர்

டெக்னீசியன்ஸ்…

Script & Direction: Chachhi

Producer: Bharathwaj Muralikrishnan, Anandakrishnan Shanmugam & Sriram Sathyanarayanan

Dop: P.G. Muthaiya

Editor: Martin Titus A

Music: M.S.Jones Rupert

Dialogue: J.M.Raja

Production Manager: Umamaheshwara Raju

Lyrics:Ragava Krishnan , Naveen Bharathi & Sai Vinayagam

Stunt:Ram Kumar & Suresh

Sound design: Arun Ak & Raja Nallaiah

P. R. O: Sathish (Aim)

Publicity Designs – Nijan Kennady

 

 

படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருப்பது ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் என்று சொன்னால் அது மிகையல்ல.. ஜோன்ஸ் இசையில் பின்னணி இசை திரில்லர் ரகம்.. அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை உண்டாக்குகிறது..

பி ஜி முத்தையா ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் ரசனை மிகுந்தவை.. ஏற்காட்டில் அந்த குளிர் பிரதேசத்தில் படமாக்கிய விதம் அருமை..

மார்ட்டின் டைட்டஸ் படத்தொகுப்பில் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்றாகும்.. அந்த எடிட்டிங் தான் சதீஷை ஹீரோவாக காட்டி இருக்கிறது..

சதீஷின் மச்சான் சாச்சி படத்தை இயக்கியிருக்கிறார்.. தன் தங்கையை அவருக்கு மணமுடித்து இருப்பதால் படத்தில் ஹீரோவுக்கு ஹீரோயின் வைக்காமல் விட்டு விட்டாரா.? தங்கை கோபித்துக் கொள்வாரா சாச்சி சார்.?

படத்தில் வெண்பா, ரித்திகா, வித்யா பிரதீப் ஆகிய நாயகிகள் இருந்தும் எவருக்குமே ஸ்கோப் இல்லை..

இறுதியாக அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு மெலோடி பாடலை கொடுத்திருப்பது சிறப்பு..

சாமானியன் ஒருவனால் போலீசை எதிர்த்து போராட முடியாது.. எனவே அதற்கான திரைக்கதை அமைத்து படமாக்கி இருப்பது நம்பும்படியாக இருக்கிறது.

சட்டம் என்பது எல்லாருக்கும் பொதுவானது.. அதற்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.. ஆனால் அதிகாரத் திமிரில் இருக்கும் காவலர்கள் கள்வன்களாக மாறும்போது சட்டத்தை ஒருவன் கையில் எடுப்பது தவறு இல்லை என்பதை திரில்லர் பாணியில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

ஆக சட்டம் என் கையில்.. நீதி போராட்டம்

Sattam En Kaiyil movie review