தில் ராஜா விமர்சனம்.. கெத்து ராஜா
தில் ராஜா விமர்சனம்.. கெத்து ராஜா
ஸ்டோரி…
நாயகன் விஜய் சத்யா.. வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது..
நான் என் மகளுக்காக ஷாப்பிங் சென்று இருக்கக் கூடாது.. நான் அமைச்சரை சந்தித்திருக்கக் கூடாது.. இப்படி செய்ததால் தான் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டேன் என்று தன் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்கிறார் நாயகன் விஜய் சத்யா.
மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் ஷாப்பிங் சென்று விட்டு இரவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சத்யா.. இதில் இவரின் கேரக்டர் பெயர் ரஜினி.. இவர் ரஜினி ரசிகரும் கூட..
காரில் வரும்போது அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் நாயகி ஷெரின் மீது ஆசைப்பட்டு அவளை அடையத் துடிக்கின்றனர்.
அவர்களிடம் மோதி தன் குடும்பத்தை காப்பாற்றி ஓடி செல்கிறார் நாயகன்.. அமைச்சரின் மகனை யாரோ ஒருவர் கொன்று விட கொலை பழி நாயகன் மீது விழுகிறது
எனவே போலீசும் அமைச்சரின் அடியாள்களும் இவரை தேடுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டாரா.? அதிகார வர்க்கத்திற்கு கட்டுப்பட்டாரா அமைச்சரும் போலீசும் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..
நாயகன் – விஜய் சத்யா
நாயகி – ஷெரின்..
போலீஸ் – சம்யுக்தா
அமைச்சர் – வெங்கடேஷ்
அமைச்சர் மனைவி – வனிதா
ஆக்ஷன் ஹீரோவுக்கு உரித்தான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு நாயகனாக உயர்ந்து நிற்கிறார் விஜய் சத்யா.. இவர் எத்தனை பேரை அடித்தாலும் நம்பலாம் என்ற தோற்றத்தை இவரது சிக்ஸ் பேக் நம்ப வைக்கிறது.. ரொமான்ஸ் சீன்களில் கூடுதல் மெனக்கட்டு இருக்கலாம் ப்ரோ..
வனிதா கேரக்டர் வேஸ்ட்.. இடைவேளையில் இவரது கேரக்டர் மீது இருந்த எதிர்பார்ப்பு இடைவேளைக்குப் பிறகு ஒன்றுமே இல்லை..
இயக்குனரே அமைச்சராக.. ஒரு அதிகாரமிக்க அரசியல்வாதியாக அசத்தியிருக்கிறார் ஏ வெங்கடேஷ்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக ஷெரின்.. துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்த ஷெரின் போல ஜொலிக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா.. கலர் டிரஸ்சில் கலக்கி இருக்கிறார்.. கிளைமாக்சில் இவரது ட்விஸ்ட் சூப்பர்..
இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோரும் உண்டு.. மினிஸ்டர் மகன் மற்றும் அவரது நண்பர்களும் மிகை இல்லாத நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – நெல்லை ஜெயந்தன், கலைகுமார் .
ஒளிப்பதிவு – மனோ V.நாராயணா
கலை – ஆண்டனி பீட்டர்
நடனம் – செந்தாமரை
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.வெங்கடேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் : கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio )
தயாரிப்பாளர் – கோவை பாலசுப்பிரமணியம்.
மனோ நாராயணனின் ஒளிப்பதிவில் கார் சேசிங் சீன் அருமை.. இரவில் அடர்ந்த காட்டில் நடக்கும் சண்டை காட்சி பதப்பதப்பை உண்டாக்குகிறது.. அதில் வரும் வாட்டர் பாட்டில் சீன் ஓவர் கற்பனை..
பாடல்களை விட பின்னனி இசையில் கூடுதல் மெனக்கடல் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ்.. மேலும் இவரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டும் இருக்கிறார்.
தில் ராஜா தமிழ் படம் என்றாலும் தெலுங்கு ஆடியன்சியும் கவரும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்..
அதிரடி ஆக்க்ஷன் படங்களை இயக்கிய வெங்கடேஷ் இதில் விஜய் சத்யாவுக்கு ஏற்ற ஆக்சன் கதையில் ஹீரோவை பொருத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்..
இளம் வயது ஹீரோ என்றாலும் அவருக்கு ஒரு மகள்.. குடும்ப நண்பர்கள்.. அரசியல் பிரச்சனை.. பெண்களுக்கு பாதுகாப்பின்மை.. போலீஸ் இன்வெஸ்டிகேஷன்.. உயிர் அதிகாரிகளின் அழுத்தம்.. என வழக்கமான கதையை சொல்லி ஒரு கமர்சியல் படத்தை கொடுத்து இருக்கிறார் டைரக்டர்..
ஆக… தில் ராஜா… கெத்து ராஜா
Dhilraja movie review

