நடிகரை காதலிக்காதது ஏன்? அமெரிக்க மாப்பிள்ளை நவ்னீத்.? சாக்க்ஷி அகர்வால் பதில்கள்

நடிகரை காதலிக்காதது ஏன்? அமெரிக்க மாப்பிள்ளை நவ்னீத்.? சாக்க்ஷி அகர்வால் பதில்கள்

 

நடிகரை காதலிக்காதது ஏன்? அமெரிக்க மாப்பிள்ளை நவ்னீத்.? சாக்க்ஷி அகர்வால் பதில்கள்

 

ரஜினியுடன் காலா & அஜித்துடன் ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

இவர் தனது நீண்டகால நண்பரான நவ்னீத் என்பவரை ஜனவரி 2ல் கோவாவில் திருமணம் செய்தார்.

தனது திருமண குறித்த நினைவுகளை சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை சாக்ஷி அகர்வால்.. அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்..

“சிறு வயது முதலே எனக்கு நவ்னீத்தை நன்றாக தெரியும்.. நான் சினிமாவில் நுழைய வேண்டும் என்று முடிவெடுத்த போது எனக்கு அப்போதே உறுதுணையாக இருந்தவர் நவ்னீத்.. பிரம்மாண்ட படத்தில் நடித்த பிறகுதான் திருமணம் என்று ஒருமுறை சொல்லி இருந்தேன்.. ஆனால் திருமணத்திற்கான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானதால் திருமணத்தை செய்து கொண்டேன்.. இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.. அவசியமான முடிவு தான்.. ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்..

என் கணவர் நவ்னீத் அமெரிக்கா செல்ல இருந்தார்.. ஆனால் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்பதால் தனது பயணத்தை தள்ளி வைத்தார்.. எனக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங் தொடங்கிவிடும்.. எனவே நானும் என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவேன்.. திருமணமான பின்னரும் பல நடிகைகள் சினிமாவில் சாதித்து வருகின்றனர்..

ஹனிமூன் செல்ல வேண்டும்.. தமிழ்நாட்டில் நல்ல சிறப்பான சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது.. தமிழ்நாடு எங்களுக்கு பிடித்த ஊர்.. நவ்னீத் உடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஹனிமூன் தான்.. எனவே இங்கேயும் ஹனிமூன்..” என மணமக்கள் இருவரும் ஒன்றாக தெரிவித்தனர்.

Sakshi Agarwal and Navneet press meet