Right ரைட் விமர்சனம்.. காவல் நிலைய கலவரம்
Right ரைட் விமர்சனம்.. காவல் நிலைய கலவரம்
சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் & அருண் பாண்டியன் இணைந்துள்ள படம் ‘ரைட்’.
ஸ்டோரி…
அருண் பாண்டியன் தன் மகனை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கிறார்.. ஆனால் அவர்கள் வழக்கம் போல அலட்சியமாக இருக்கையில் அங்கேயே இருந்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடுகிறார்..
இந்த சூழ்நிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் பழைய திருட்டுப் போன லேப்டாப் ஒன்று இருக்கிறது.. அதை ஆன் செய்து பார்க்கையில் அதில் மூலம் ஒரு மர்மக்குரல் ஆசாமி ஒருவர் போலீஸ் நிலையத்தை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகிறார்..
அதாவது இந்த போலீஸ் நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.. நான் சொல்வதை செய்தால் உங்கள் அனைவரையும் விடுவேன் என மிரட்டுகிறார்.
தன் மகனை கண்டுபிடிக்காத காரணத்தினால் அருண்பாண்டியன் இப்படி மிரட்டுகிறாரோ என்ற போலீசுக்கு எண்ணம் வருகிறது.. இதனையடுத்து விசாரிக்க நீதிபதி வினோதினியும் காவல் நிலையத்திற்கு வருகிறார்.
இதனால் மாநகரமே பரபரப்பாகிறது.. அடுத்தது என்ன நடந்தது.? அந்த காவல் நிலையத்தை கட்டுக்கு கொண்டு வந்த நபர் யார்.? இவர்களின் பின்னணி என்ன என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
அருண்பாண்டியன் நட்டி நடராஜ் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் இந்த ரைட் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளனர்.. நட்டியின் கிளைமாக்ஸ் டெஸ்ட் எதிர்பாராத ஒன்று.. மகளுக்காக உருகும் காட்சியில் நட்டி கண்களை நனைய வைக்கிறார்..
அருண் பாண்டியன் குரல் எப்போதும் மிரட்டல்.. ஆனால் நிறுத்தி நிதானமாக பேசுவதால் அதுவே சோர்வை தருகிறது.
அக்ஷரா ரெட்டி அசத்தலான நடிப்பில் கவர்கிறார்.. மூணாறு ரமேஷுக்கு இது முக்கியமான வேடம்.. வெடிகுண்டு நாற்காலியில் அமர்ந்து அவர் செய்யும் உடல் மொழி சிறப்பு..
நீதிபதி வினோதினி, ஆதித்யா சிவகுமார், தங்கதுரை, யுவினா என அனைவருமே நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.. நடிகை அனுபமாவின் மகன் இதில் அருண் பாண்டியன் மகனாக நடித்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
ஒரு காவல் நிலையத்திற்குள் அனைத்து கேரக்டர் களையும் கொண்டு வந்து முகபாவனைகளை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பத்மேஷ்.
காவல் நிலையத்திற்கு கதை நகர்வதால் பாடல்கள் இல்லை.. ஆனால் பிளாஷ்பேக்கில் தேவையில்லாத பாடலை திணித்திருப்பதாக தெரிகிறது.. இசை – குணா பாலசுப்பிரமணியம்.. பின்னணி இசை ரைட் படத்திற்கு ரைட்டாக பொருந்தி இருக்கிறது…
இயக்குனர் – சுப்ரமணியன் ரமேஷ்குமார்
பொதுவாக வெடிகுண்டு மிரட்டல் என்றால் போலீஸ் சுற்றி வருவார்கள்.. ஆனால் இது போலீஸ் நிலையத்தை சுற்றி கதையை அமைத்திருப்பது வித்தியாசமான ரைட்.
Right movie review

