பல்டி விமர்சனம்.. ஆக்சன் எமோஷன் கலந்த அதிரடி..
பல்டி விமர்சனம்.. ஆக்சன் எமோஷன் கலந்த அதிரடி..
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு நடித்துள்ள ‘பல்டி’.
சாந்தனு மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார். இது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டோரி…
ஷேன் நிகம் & சாந்தனு இருவரும் நெருக்கமான நண்பர்கள்.. இவர்கள் கபடி விளையாட்டு வீரர்கள்.. ஒரு கட்டத்தில் பைனான்சியர் செல்வராகவன் நடத்தும் மற்றொரு அணியை எதிர்த்து தோல்வி அடைய செய்து வெற்றி பெறுகின்றனர்.
இதனால் செல்வராகவன் இவர்களை விலைக்கு வாங்குகிறார்.. அவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதால் இவர்களுக்கு அதில் லாபம் கிடைக்க இவர்களின் வாழ்க்கை தடம் மாறுகிறது.
ஆனால் ஒரு கட்டத்தில் ஷேன் நிகம் காதலி வட்டி வாங்கி பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். இதனையடுத்து காதலியை கரம்பிடிக்க செல்வராகவனை எதிர்த்து நிற்கிறார் நாயகன் ஷேன் நிகம்.
அதன் பிறகு என்ன நடந்தது.? நண்பனுக்காக செல்வராகவனை எதிர்த்தாரா அல்லது அவனை விட்டு செல்வராகவன் பக்கம் நின்றாரா சாந்தனு.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ஷேன் நிகம் மலையாள நடிகர் என்றாலும் தமிழ் படத்திற்கு பக்காவாக பொருந்துகிறார்.. சில நேரங்களில் ராவணன் பீமா பட நாயகன் சீயான் விக்ரமை நினைவுபடுத்துகிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் மாஸ் காட்டி இருக்கிறார்.
பல படங்களில் சாந்தனு சாந்தமாக காணப்படுவார்.. இதில் கபடியுடன் மலையாள சினிமாவில் கதகளியும் இருக்கிறார்.. இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் சாந்தனு இனி சபாஷ் பெறலாம்.
அயோத்தி படத்தில் அழுகை முகமாக வந்த பிரீத்தி அஸ்ராணி இதில் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்.
கொஞ்சம் பேச்சு செயல் அதிகம் என்பது போல வில்லனாக மிரட்டி இருக்கிறார் செல்வராகவன்..
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் & பூர்ணிமா இந்திரஜித் இருவரும் வில்லத்தனம் கலந்த மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
சாய் அபயங்கரின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.. பல இடங்களில் பல்டியை தாங்கிய பாடியாக உயர்ந்து நிற்கிறது..
ஒளிப்பதிவில் அசத்துலாக தன் பணியை செய்து இருக்கிறார் அலெக்ஸ் ஜெ.புலிக்கல்.. பல காட்சிகள் இரவு நேரத்தில் இருந்தாலும் லைட்டிங்கில் கவனம் செலுத்தி இருப்பது சிறப்பு.

உன்னி சிவலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார் எந்த இடத்திலும் மலையாள வாசனையை தமிழ் மணத்தோடு கலந்து கொடுத்திருப்பது அருமை.. தமிழ் பலகைகள் மலையாள பலகைகள் என இரண்டையும் காட்டி இரண்டு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.
இதுவும் வழக்கமான கபடி ஆட்டம் தான் என நினைக்கையில் திடீரென பைனான்ஸ் வட்டி மிரட்டல் கேங்ஸ்டர்ஸ் என கதைகளை திருப்பி இந்த பல்டியை பந்தாடியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்..
Balti movie review

