‘ஃபீனிக்ஸ்’ ரிலீஸ் தள்ளிவைப்பு : சூர்யா படத்தில் விஜய் கொடி.? சென்சார் தடை.?
‘ஃபீனிக்ஸ்’ ரிலீஸ் தள்ளிவைப்பு : சூர்யா படத்தில் விஜய் கொடி.? சென்சார் தடை.?
சூர்யாவுடன் மோதவிருந்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.; ஆனா இப்போ இல்லையாம்.!
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஃபீனிக்ஸ் வீழான்’.
இவர் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக சிந்துபாத் என்ற படத்தில் தன் தந்தை விஜய் சேதுபதி உடன் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்க இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்தப் படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. இதே நாளில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படமும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது..
அந்த அறிவிப்பில்
*அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களே!*
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ முன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இருக்கும்..
கூடுதல் தகவல்..
மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக்கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதற்கு சென்சாரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது..
Phoenix release postponed due to TVK Flag



