ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்.. அரைச்ச மாவு அரசியல்

ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்.. அரைச்ச மாவு அரசியல்

 

 

ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்.. அரைச்ச மாவு அரசியல்

ஸ்டோரி…

தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றவர் முத்தையா (கவுண்டமணி). எனவே இவருக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்று பெயர் உண்டு. இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் யோகி பாபு..

இந்த நிலையில் தன்னுடைய மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் மாப்பிள்ளை வேண்டும் என அடம் பிடிக்கிறார் கவுண்டமணி..

இதனால் பல வரன்கள் வந்தும் தட்டிச் செல்கிறது.. தங்கள் அண்ணனின் ஆசையை நிறைவேற்ற மூன்று தங்கைகளுமே மூன்று அண்ணன் தம்பிகளை தேடி செல்கின்றனர்..

அப்படி கிடைக்காத சூழ்நிலையில் மூன்று ஹீரோக்களை மூன்று தங்கைகள் காதலிக்கின்றனர்.. அண்ணனை ஏமாற்ற காதலனுடன் இணைந்து திட்டம் போடுகின்றனர்.

இறுதியில் என்ன ஆனது? காதலையும் அரசியலையும் எப்படி சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜகோபால் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கதையின் நாயகனாக கவுண்டமணி.. உடல் இளைத்தாலும் லொள்ளு இளைக்காமல் கவுண்டமணி அவரது ஸ்டைலில் காமெடி கவுண்டர் கொடுத்து அசத்தியிருக்கிறார்..

ஆனால் இவரது பேத்தி வயதுள்ள நடிகைகளை மகளாக நடித்து வைத்திருக்கலாம்.. ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க வைத்து ரசிகர்களை சோதித்திருக்கிறார்கள்.. அட்லீஸ்ட் கவுண்டமணியாவது சொல்லி இருக்கலாம்.

கவுண்டமணி மனைவி மற்றும் மூன்று தங்கைகள் அனைவருமே கொள்ளை அழகு.. முதல் இரண்டு தங்கைகள் அழகிலும் நடிப்பிலும் மனதில் இடம் பிடிக்கின்றனர்..

சித்ரா லட்சுமணன், ரவிமரியா, யோகிபாபு, சிங்​க​முத்து, வையாபுரி, முத்​துக்​காளை, மொட்டை ராஜேந்​திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்​தா​லும் நகைச்சுவைக்கு பஞ்சம் தான்.. ஒருவேளை கவுண்டமணி இருப்பதால் இவர்களின் காமெடி எடுபட வில்லையோ?? கவுண்டமணியும் தனக்கு வழக்கமான சூப்பர் ஹிட்டான காமெடி டயலாக்குகளை சொல்லி சிரிக்க வைக்கிறார்.. செந்தில் இணைந்திருந்தால் இன்னும் காமெடி களைகட்டி இருக்கும்..

ஓஏகே சுந்​தர், வாசன் கார்த்திக், அன்பு மயில்​சாமி, கஜேஸ் நாகேஷ், காதல் சுகுமார், ஆதேஷ் பாலா உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்ஸ்…

ராஜா சேதுபதி மற்றும் நோயலின் படத்​தொகுப்பு செய்துள்ளனர்.. படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டிருக்கும்..

காத்​தவ​ராயனின் ஒளிப்​ப​தி​வும் சித்தார்த் விபினின் பின்னணி இசையும் படத்​ படத்திற்கு பலம் சேர்த்துள்ளது..

கவுண்டமணியை மையமாக வைத்து காதலையும் அரசியலையும் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் சாய் ராஜகோபால்.. இதில் காதலை விட அரசியல் களைகட்டி இருந்தாலும் இந்தப் படம் கல்லா கட்டுமா என்பதை சந்தேகம்தான்..?

Oththa Votu Muthaiya movie review