2கே லவ் ஸ்டோரி விமர்சனம் 4/5.. காதலை வென்ற நட்பு
2கே லவ் ஸ்டோரி விமர்சனம் 4/5.. காதலை வென்ற நட்பு
ஸ்டோரி…
27 வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் & ஷாலினி நடிப்பில் பிரியாத வரவேண்டும் என்ற ஒரு திரைப்படம் வெளியானது.
குழந்தை பருவம் முதலே நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் இறுதிவரை நட்பாக பழக முடியுமா? என்ற கருத்தை இந்த படம் வலியுறுத்தி இருக்கும்.
அதே பாணியில் இன்றைய 2k கிட்ஸ்களுக்காக சுசீந்திரன் முற்றிலும் புது முகங்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் இந்த டூ கே லவ் ஸ்டோரி.
நாயகன் ஜகவீர் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவர்கள் இருவரும் சிறுவயது முதலில் நண்பர்கள்.. சைக்கிள் மீடியாவில் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள் இவர்களை பார்த்து பலரும் நட்பாக பழகி வருகிறார்கள்..
இந்த சூழ்நிலையில் இவர்களால் இறுதிவரை காதலிக்காமல் நட்பை மட்டும் தொடர முடிந்ததா? என்பதை முக்கோண காதல் நட்பு கதையுடன் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்..
கேரக்டர்ஸ்…
ஜகவீர் முதல் படம் என்றாலும் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.. முக்கியமாக நட்பை போற்றுவதாகட்டும் பெண்களை மதிப்பதாகட்டும் சிறந்த நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..
மீனாட்சி கோவிந்தராஜன் பெண்களுக்கு உரித்தான இரண்டு மன நிலையை பல காட்சிகளை வெளிப்படுத்தி தோழியாகவும் மின்னுகிறார்..
சைரன் பட இயக்குனர் ஆண்டணி பாக்யராஜ்.. இதில் 90ஸ் கிட்ஸ் ஆக வருகிறார்.. பால சரவணன் 2கே கிட்சாக வருகிறார்.. ஆனால் ஆண்டணியை விட பால சரவணன் முதிர்ச்சியாகவே காணப்படுகிறார்.. இயக்குனர் கவனித்திருக்கலாம்.. இவர்கள் இருவரும் கலகலப்பு ஊட்டி இருக்கின்றனர்.
காதலியாக லத்திகா.. மாடர்ன் உடையிலும் புடவையிலும் அசத்தலாக வந்து நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..
இவர்களுடன் சிங்கம்புலி, ஜி.பி.முத்து சிரிக்க வைக்கிறார்கள். வினோதினி, ஹரிதா, நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நிறைவு..

டெக்னீசியன்ஸ்…
வி.எஸ்.ஆனந்தா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக படத்தை காண வைக்கிறது.. டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர்.. இன்றைய இளைஞர்களுக்காக போட்ட மெட்டு ‘ஹொவ் இஸ் இட் பாசிபிள் ப்ரோ..’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது..
சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட காலத்தில் ஆணும் பெண்ணும் பழகினாலும் அவர்களால் நட்பாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்தி 2கே கிட்ஸ்க்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
ஆக இந்த டூகே லவ் ஸ்டோரி.. காதலை வென்ற நட்பு
2K Love story movie review

