ஓ பட்டர்பிளை விமர்சனம்.. வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை

ஓ பட்டர்பிளை விமர்சனம்.. வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை

 

ஓ பட்டர்பிளை விமர்சனம்.. வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை

 

ஸ்டோரி…

நாயகி நிவேதா சதீஷ் இவரது முன்னாள் காதலன் சிபி இவரது கணவர் அதுல்.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கணவர் & முன்னாள் காதலருடன் ஒரே வீட்டில் தங்கு நேரிடுகிறது நாயகி..

ஒரு பக்கம் கணவன் ஒரு பக்கம் முன்னால் காதலன் என பரிதவிக்கும் சூழ்நிலையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் மீதிக்கதை..

இவை ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் இயற்கை ஆர்வலர் நாசர் வண்ணத்துப்பூச்சி வளர்க்கிறார்..அந்த வண்ணத்துப்பூச்சி கதையை இந்த முக்கோண காதலுடன் சேர்கிறார் இயக்குனர்.. அது என்ன..?


கேரக்டர்ஸ்…

நாயகியாக நிவேதா சதீஷ்.. தன்னைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கேரக்டரில் பரிதவிப்பு பதட்டம் நடுக்கம் உணர்ச்சி காதல் குடும்பம் என அனைத்தையும் உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறார்..

முன்னாள் காதலனாக சிபி.. செம ஸ்மார்ட் நடிப்பிலும்… கணவராக அதுல்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பு..

இவர்களுடன் நாசர் & கீதா கைலாசம் உள்ளிட்டோரும்.. கதை ஓட்டத்திற்கு கேரக்டர் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இவர்கள் அனுபவ நடிப்புக்கு ஏற்ற தீனி இல்லை.. நாயகியின் அக்காவாக பெண் துறவி கேரக்டரில் லட்சுமி பிரியா..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன்.. பெரும்பாலும் ஒரே வீட்டிற்கு காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.. அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து படமாக்கி இருப்பது சிறப்பு..

வைசாக் சோமநாத் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.. படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன்..

விஜய் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார்.. திட்டமிட்டபடி வாழ்க்கை நடப்பதில்லை அது அது போக்கில் எதார்த்தமாக நடைபெறும் சம்பவங்கள் தான் கதை.. அதை வண்ணத்துப்பூச்சியுடன் அழகாக கனெக்ட் செய்து இருக்கிறார் இயக்குனர். சிலந்தி வலைக்குள் சிக்கிய வண்ணத்துப்பூச்சி அதிலிருந்து விடுதலைப் பெற்று சிறகடிக்கும் காட்சியுடன் படத்தை நிறைவு செய்திருக்கிறார்..

 

Oh Butter fly movie review