சஸ்பென்ஸ் கலந்த டைம் டிராவல் கதையாக சந்தானம் 20-வது படம்..!

சஸ்பென்ஸ் கலந்த டைம் டிராவல் கதையாக சந்தானம் 20-வது படம்..!

சஸ்பென்ஸ் கலந்த டைம் டிராவல் கதையாக சந்தானம் 20-வது படம்..!

 

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சந்தானம் நடிப்பில் உருவாகும் 20-வது படம் இதுவாகும். இதனை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் கே 7 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..

சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் மர்மம் – சஸ்பென்ஸ் கலந்த டைம் டிராவல் கதையாகும். இது ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது. அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும் , சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துகிறது.

இதில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்து வருகிறார்கள்.

இதற்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்..

 

Santhanam 20th movie news update