நீல நிறச் சூரியன் விமர்சனம்.. சுதந்திரச் சூரியன்

நீல நிறச் சூரியன் விமர்சனம்.. சுதந்திரச் சூரியன்

 

 

நீல நிறச் சூரியன் விமர்சனம்.. சுதந்திர சூரியன்

Neela Nira Sooriyan

ஸ்டோரி…

பிறக்கும்போது ஆணாக பிறந்த ஒருவர் நாளடைவில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாற நினைக்கிறார். ஆனால் தன் பெற்றோர் / சமூகம் எப்படி பார்க்கும் என்ற மனநிலையிலேயே பாதி வயதை கடக்கும் இவர் திடீரென பெண்ணாக மாறி வந்து நிற்கிறார்.. அதுவரை அரவிந்தனாக இவரை பார்த்தவர்கள் இனி பானுவாக பார்க்க வேண்டும் என்கிறார்.

அரவிந்தன் மனநிலை எப்படி இருந்தது.? பானுவின் மனநிலை எப்படி ? இவர்களை இந்த சமூகம் & குடும்பம் எப்படி பார்த்தது.? அதன் பின்னர் இவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

Aravind & Bhanu – Samyuktha Vijayan

சம்யுக்தா விஜயன்.. இந்தப் படத்தின் நாயகன் நாயகி இயக்குனர் எல்லாம் இவரே.. தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் படம் இது..

தன்னுள் ஏற்பட்ட உளவியல் மாற்றங்களை உணர்வு பூர்வமாக உணர்ந்து நடித்திருக்கிறார்.. இவரே ஒரு திருநங்கை என்பதால் ஆண் & பெண் உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறார்..

இவரது அக்கா கேரக்டர் வருபவரும் சில காட்சிகளை வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.. வசனங்களும் கைதட்டல் பெற வைக்கிறது.. முக்கியமாக அக்காவும் இவரும் பேசும்போது..

எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் குழந்தை இல்ல.. ஆனா மாமாவை யாருமே ஒன்னும் கேட்க மாட்டாங்க.. என்ன பத்தி மட்டும் தான் கேட்கிறார்கள்.. நீ ஏண்டி ஆணாக இருந்து பெண்ணாக மாறிட்ட.. அந்த வலியை உன்னால தாங்கிக்க முடியாது என சொல்லும்போது பெண்ணின் மனவலியை உணர்த்தி இருக்கிறார்.

பெண்ணாக மாறியப்பின் ஒரு ஆணின் மீது காதல் வயப்படும்போது அவர் இவரை ஒரு திருநங்கையாகவும் பாலியல் தொழிலாளியாகவும் பார்ப்பது பாராட்டுக்குரிய காட்சியாகும்..

சம்யுக்தாவின் தோழியாக வரும் ஹரிதா அவர் ஆணாக இருந்த போதும் அன்பு காட்டுவதும் பெண்ணாக மாறிய பின் அதை அன்பு காட்டுவதும் என உற்ற தோழியாக சபாஷ் பெறுகிறார் ஹரிதா..

மனநல மருத்துவராக கிட்டி, அரவிந்தின் தந்தையாக கஜராஜ் மற்றும் தாயாக கீதா கைலாசம், அரவிந்தின் உறவினராக பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி துணை தலைமை ஆசிரியராக கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் வேடத்தில் மசாந்த் நட்ராஜன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

Haritha – Haritha
Karthik’s Father – Winner Ramachandran
Endocrinologist – Mona Bedra
Bhanu’s Cousin sister – Semmalar Annam
Principal – Kausalya Saravanaraja
Correspondent – Vishwanath Surendiran
Ranjith – Ajay Eapen Gopal

தொழில்நுட்ப கலைஞர்கள்…

Director & writter – Samyuktha Vijayan
DOP, Editor & Music – Steev Benjamin
Producer – Mala Manyan
PRO – KSK Selva
Publicity Designer – Selva
Audio Mix – Jaiker Harinath
Co director – Kowshik J
Associate Director- Baskaran
Art – Meetu ks

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.. அங்குள்ள நபர்களையே நடிக்க வைத்திருப்பதால் அழகான தமிழை கேட்க முடிகிறது..

பாடல்களும் பின்னணி இசையும் நேர்த்தி.. படத்தொகுப்பிலும் குறை இல்லை..

ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறினால் அவரை பெண்ணாக பார்க்காமல் ஒரு திருநங்கையாகவே இந்த சமூகம் பார்க்கிறது.. பிறந்தது இயற்கையாக இருந்தாலும் நம் விருப்பப்படி வாழ இந்த சமூகத்தில் சுதந்திரம் இல்லை என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்..

கமர்சியல் சினிமாவாக அல்லாமல் உலக சினிமாவுக்கு ஏற்றபடி கேமராவை ஒரே இடத்தில் வைத்து படமாக்கி இருக்கிறார்.. இது உலக சினிமா ஃபார்முலா என சொல்லப்பட்டாலும் நடிகர்களின் முகபாவனைகள் தெரியாமல் இருப்பது வருத்தம்.. அதுமட்டுமில்லாமல் எக்ஸ்ட்ரா லைட்டிங் கொடுக்காமல் இயற்கையான வெளிச்சத்தில் படமாக்கி இருப்பது தெளிவாக இல்லை.

தான் கடந்து வந்த வழியை.. தான் சந்தித்த வலிகளை தொகுத்து ஒரு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்..

ஆக நீல நிறச்சூரியன்.. சுதந்திர சூரியன்

Neela Nira Sooriyan movie review