ல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கெட்ட கனவு

ல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கெட்ட கனவு

 

 

ல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கெட்ட கனவு

ஸ்டோரி…

நாயகன் சதா நாடார்.. நாயகி மோனிகா செலேனா.. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் தம்பதியினர்.. இவர்கள் இருவருமே இந்த படத்தை இயக்கி தயாரித்து காதல் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர்.

விமர்சனத்தில் பார்ப்போம்..

நாயகன் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது.. அந்த கனவுகள் எல்லாம் சில தினங்களில் நிஜத்திலும் நடக்கிறது.. ஒருநாள் கனவில் தன் மனைவி இவரே கொல்வது போல கனவு வருகிறது.. இதுவும் நடந்து விடுமோ என பதட்டம் கொள்கிறார்.

இறுதியாக என்ன நடந்தது.. கனவு நிஜமானதா? கனவில் இருந்து தன் மனைவியை காப்பாற்றினாரா? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதா நாடார்.. தன் சாதி அடையாளங்களை ரஞ்சித் & மாரி செல்வராஜ் போன்றவர்கள் அடையாளப்படுத்தும்போது நானும் அடையாளப்படுத்துவேன்..

ரஞ்சித் ஒரு சாதி வெறியர்.. எனவே நானும் தன் சாதியை அடையாளப்படுத்துவேன் என்ற நோக்கத்தில் நாடார் என பெயர் சேர்த்து வைத்துக் கொண்டு இந்த படத்தை இயக்கி நடித்து தயாரித்திருக்கிறார்.

இவரும் காதல் மனைவியும் நாயகன் நாயகி என்பதால் இவர்களை வைத்து படத்தை முழுவதும் ஓட்ட நினைத்திருக்கிறார்.. அதில் பெரிதாக சுவாரசியம் இல்லை.. அதற்கு இன்னும் மெனக்கடல் தேவை..

நாயகி மோனிகா அழகிலும் கவர்ச்சியிலும் கவர்கிறார்.. இன்னும் முயற்சி செய்தால் நடிப்பிலும் கவரலாம்..

கணவன் மனைவி படத்தில் ஹீரோ ஹீரோயின் என்பதால் அவர்களுக்கு ஏற்றபடி ஹாட்டான காட்சிகளை வைத்து இளசுகளை சூடேற்றி இருக்கின்றனர்.

நாயகன் சதாவுக்கு உற்ற துணையாக இருந்த ஒரு நபரை இந்த படத்தில் அவரது மாமா கேரக்டர் நடித்து வைத்திருக்கிறார்.. அவரும் கொஞ்சம் குடிப்பதும் அட்வைஸ் செய்வதுமாக வருகிறார்.

கிளைமாக்ஸ் காட்சியை எப்படி முடிக்க வேண்டும் என தெரியாமல் தடுமாறிய அவருக்கு அட இருமா.. அவனே ஒரு கிளைமாக்ஸுக்கு வரட்டும் என்கிறார் அப்படித்தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் முடிவடைகிறது..

கனவில் கூட பணக்காரனாக இருக்கக் கூடாது என்ற தத்துவத்துடன் படத்தை முடிக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு – கப்பில் கிரியேஷன்ஸ்

ஒளிப்பதிவு – மனோ குமார்

இசை – ஜான்சன்

பின்னணி இசை – சுரேஷ் ஷர்மா

பாடல்கள் சுதந்திரன்

எடிட்டிங் – பரணி செல்வம்

டைரக்ஷன் : சதா நாடார் & மோனிகா செலேனா

படத்தின் ஒளிப்பதிவாளர் மணக்குமார் தன் வேலையை நேர்த்தியாக செய்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.. பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசை சுமார் ரகமே..

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் சிரிப்பையும் சிந்தனையும் வர வைத்தாலும் அட இதற்காகவா இத்தனை கலாட்டா என்ற எண்ணமே தோன்றுகிறது..

பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய் ல்தகா சைஆ என்று சொன்னார்.. அதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்.. கனவு ஆசை என்று வைத்திருந்தால் கூட கொஞ்சம் ரசித்து கொள்ளலாம்..

படத்திற்கும் தலைப்புக்கும் என்னதான் சம்பந்தம் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஆக ல்தகா சைஆ.. கெட்ட கனவு

il thaka saiaa movie review