நரி வேட்ட விமர்சனம்.. காட்டுப் பகுதியில் காவலர்கள்
நரி வேட்ட விமர்சனம்.. காட்டுப் பகுதியில் காவலர்கள்
ஸ்டோரி…
பட்டதாரியான நாயகன் டோனோ தாமஸ் தனக்கு பிடித்த வேலையை செய்யும் பணிக்காக காத்திருக்கிறார்.. வேறு வழியின்றி காதலி & குடும்பத்தினர் வற்புறுத்தலால் போலீஸ் வேலையில் சேருகிறார்.. ஆனாலும் உயர்ந்த பதவியில் தான் சேர வேண்டும் என்று நினைக்கையில் அவருக்கு கான்ஸ்டபிள் பதவியே கிடைக்கிறது..
கேரள வயநாடு பகுதியில் உள்ள மலைவாழ் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.. அதனை தடுக்க காவல்துறை அங்கு செல்கிறது.. அங்கு பாதுகாப்பு பணியில் சேரன் தலைமையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..
ஒரு கட்டத்தில் சக போலீஸ் சுராஜ் கொல்லப்படுகிறார்.. இதனால் அங்கு கலவரம் வெடிக்கிறது.. மேலும் டோவினோ தாமசை போலீஸ் தேட ஆரம்பிக்கிறது..
இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், நந்து
ரிசர்வ் படை காவலராக தன் கேரக்டருக்கு பிட் ஆகியிருக்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.. சென்சிட்டிவ் டைப்பான இவர் தன் கேரக்டரில் வெளுத்து கட்டி இருக்கிறார்..
சில மாதங்களுக்கு முன்பு வெளியான வீர தீர சூரன் படத்தில் நடித்த சூராஜ் வஞ்சரமூடு இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. பஷீர் கேரக்டரில் பளிச்சிடுகிறார்..
தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் சேரன் நரி வேட்டை படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம்.. அவருக்கு நெகட்டிவ் கலந்த கேரக்டர் என்றாலும் தன் நடிப்பில் முத்திரையை பதித்திருக்கிறார்.. ஆனால் சேரன் பேசும் ஆங்கிலம் ஒட்டவில்லை..
ஹீரோயினாக பிரியம்வதா கிருஷ்ணன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
விஜய்யின் ஒளிப்பதிவில் கேரள காடுகள் கூடுதல் அழகை பெறுகிறது.. ஜேக்ஸ் பிஜாய் இசை படத்திற்கு சிறப்பு.. எமோஷனல் காட்சிகளில் உணர்வுபூர்வமான இசையை உணரலாம்..
தயாரிப்பு : இந்தியன் சினிமா கம்பெனி
இயக்கம் : அனுராஜ் மனோகர்
அதிகாரம் மிக்க பதவியில் போலீஸ் காவல்துறை இருந்தாலும் அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.. அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..
மலைவாழ் மக்களின் உணர்வுகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்..
நாயகன் டோவினோ தாமஸ் கொடுக்கும் வாக்குமூலம் அரசுக்கு எச்சரிக்கை.. எந்த ஒரு சூழ்நிலையிலும் என்கவுண்டர் பயன்படுத்தக்கூடாது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார் டைரக்டர்..
Nari Vettai movie review

