நந்தன் விமர்சனம்.. சாதிக்கு சாவடி

நந்தன் விமர்சனம்.. சாதிக்கு சாவடி

 

 

நந்தன் விமர்சனம்.. சாதிக்கு சாவடி

 

ஸ்டோரி…

புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.. இவரது வீட்டில் எல்லா வேலை செய்யும் வேலையாளாக கிட்டத்தட்ட அடிமையாக இருக்கிறார் தலித் இனத்தைச் சேர்ந்த சசிகுமார்.

இந்த சூழ்நிலையில் இந்த வார்டு திடீரென ரிசர்வ் தொகுதியாக மாற்றப்படுகிறது.. எனவே அங்கு தலித் வேட்பாளர் மட்டுமே போட்டியிட முடியும் என்ற சூழ்நிலை வருகிறது..

எனவே தன் வீட்டில் வேலை செய்யும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் ஆக்கினால் தன்னால் அந்த பதவியை ஆட்டிப்படைக்க முடியும் என திட்டம் போடுகிறார் பாலாஜி சக்திவேல்.

அதன்படி சசிக்குமாரும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? பாலாஜி சொன்னதை சசிகுமார் செய்தாரா? அல்லது பதவியில் அமர்ந்து மக்களுக்கு நல்லது செய்தாரா?என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

தான் ஒரு கமர்சியல் ஹீரோ என்றாலும் அம்பேத்குமார் என்ற அந்த தலித் கேரக்டருக்கு தன்னை பக்காவாக பொருத்தியிருக்கிறார் சசிகுமார்.

தலைவர் தான் தனக்கு எல்லாமே என்றும் குடும்பத்தை கூட உதறிவிட்டு அவர் வேலை பார்க்கும் போது ஒரு அடிமையாகவே காணப்படுகிறார்.. ஊராட்சி மன்ற தலைவர் ஆன பிறகு மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்று அவர் எண்ணம் ரசிக்க வைக்கிறது.. அதன் பின்னர் அதிகார வர்க்கத்தால் தலித் மக்களும் அவரது எண்ணங்களும் நசுக்கப்படும்போது சசிகுமாரை போல நமது கண்களிலும் கண்ணீர் வருகிறது.

ஒரு காட்சியில் நிர்வாணமாக கூட நடித்திருக்கிறார் சசிகுமார்..

பல படங்களில் சாந்தமான வில்லனாக பார்த்த பாலன் சக்திவேல் இதில் மிரட்டல் வில்லனாக அரசியல்வாதியாக ஜொலிக்கிறார்.. அப்பாவி மக்களிடையே நல்லவனாகவும் தன் சாதி மக்களிடையே வல்லவனாகவும் அவர் போடும் இரட்டை வேஷங்கள் ரசிக்க வைக்கிறது..

பாலாஜி உடன் ஊராட்சி மன்ற உதவியாளராக வருபவரும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..

சசிகுமார் மனைவியாக ஸ்ருதி பெரியசாமி.. தன் கணவன் இப்படி அடிமையாக வேலை செய்கிறாரே என எண்ணும் போதும் ஒரு கட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்கும் போதும் ஒரு மனைவியாக நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

சசி மகனாக நடித்தவரும் சிறப்பு.

ஓரிரு காட்சியில் வந்தாலும் நேர்மையான அரசு ஊழியராக ஜொலிக்கிறார் சமுத்திரக்கனி..

டெக்னீசியன்ஸ்…

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம்.. ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது…

கத்துக்குட்டி, உடன் பிறப்பே போன்ற படங்களை இயக்கியவர் இரா சரவணன்.. தரமான படங்களை மட்டுமே நான் கொடுப்பேன் அந்த வழி தவற மாட்டேன் என சொல்லும் சரவணன் இதற்காக பல வருடங்கள் காத்திருந்து தயாரிப்பாளர் கிடைக்காமல் தானே ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார்.. அதற்காகவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சரவணனுக்கு பாராட்டுக்கள்..

இந்த நாட்டில் இன்னுமா இது போன்ற அவலங்கள் நடக்கிறது என கேள்வி கேட்பவர்களை நான் கையோடு அழைத்துச் சென்று காட்டவிருக்கிறேன் என படம் தொடங்கும் முன்பே டைட்டில் கார்டில் போட்டிருக்கிறார் சரவணன்.. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் சாதி கொடுமை அழியாது.. அதை ஒழிக்க வேண்டும் என்றால் தலித் இனத்தவர்கள் படித்து முன்னேறி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.. அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டும் என பல வழிமுறைகளையும் நடைமுறைகளையும் சொல்லியிருக்கிறார்..

சீமான் எடப்பாடி உள்ளிட்டவர்களையும்
கிண்டல் அடித்திருக்கிறார்.

நிறைய காட்சிகளில் ஆவணப்படம் பார்ப்பது போன்ற ஓர் உணர்வே. கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

ஆக நந்தன்… சாதிக்கு சாவடி

Nandhan movie review