கடைசி உலகப்போர் விமர்சனம்.. வித்தியாசம்.? விபரீதம்.?

கடைசி உலகப்போர் விமர்சனம்.. வித்தியாசம்.? விபரீதம்.?

 

 

கடைசி உலகப்போர் விமர்சனம்.. வித்தியாசம்.? விபரீதம்.?

 

ஸ்டோரி…

எல்லா சங்கங்களுக்கும் போட்டியாக மற்றொரு சங்கம் உருவாகும் போது ஐநா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவானால் இந்த உலகம் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கும் என்பதை கதைக்களமாக அமைத்திருக்கிறார் இயக்குனரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா

அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.?

இதில் நாசர், ஹிப் ஹாப் ஆதி, நட்டி ஆகியோரின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

கல்லூரி & நண்பர்களின் கலாட்டா.. பாட்டு ஆட்டம் ரொமான்ஸ் என சுற்றிக் கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி இந்த படத்தில் கடைசி உலகப் போர் வித்தியாசமான கதைகளத்தில் இறங்கி இருக்கிறார்.. அது கதைக்களமும் அவரை இறக்கி விட்டது என்றே சொல்லலாம்

முதலமைச்சரின் மச்சானாக கிங்மேக்கராக நட்டி நடராஜ்.. சதுரங்க வேட்டை பாணியில் முயற்சித்து சறுக்கி விட்டார் நட்டி.

நாயகியாக அனகா.. முதலமைச்சரின் மகளாகவும் கல்வித்துறை அமைச்சராகம் வருகிறார்.. உடையில் கூட கவர்ச்சி இல்லாமல் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

முதலமைச்சராக நாசர்.. புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் அழகம்பெருமாள்.. சீமானை கிண்டல் அடிக்கும் கேரக்டர் போலவே இருக்கே சார்..???

சினிமா நடிகராக ஷாரா.. பல இடங்களில் ஓவர் ஆக்டிவ்.. இவரது கேரக்டர் பெயர் ரிஷிகாந்த்.. இது ரஜினிகாந்த் / விஜயகாந்த் குறிப்பிட்டு பெயர் வைத்தாரா என்பது ஹிப்ஹாப் ஆதிக்கே வெளிச்சம்..

முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோரும் உண்டு.. இந்த கேரக்டர்ஸ் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை..

டெக்னீசியன்ஸ்…

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.. கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனத்தை கொடுத்திருக்கலாம் பல காட்சிகளில் செட் கிளியராக தெரிகிறது..

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ இருவரது பணியும் சிறப்பு..

கதை எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் தெளிவில்லாத திரைக்கதையை கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கும்.. அதில் அவர்கள் தொடர்ந்து வெற்றி கண்டு கொண்டிருப்பார்கள்.. எனவே ரசிகர்களும் அந்த இயக்குனர் நடிகர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட ரசனையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் நடிகர்கள் இயக்குனர்கள் தங்களுக்கான பாணியை மாற்றிக் கொள்ளும் போது ஒரு சிலருக்கு மட்டுமே அது வெற்றியை கொடுக்கும்.. பலருக்கு அது தோல்வியில் அமைந்திருக்கிறது.

அந்த வரிசையில் தன்னுடைய வழக்கமான பார்முலாவை மாற்றிய ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த பட மாபெரும் சரிவு என்று சொல்லலாம்..

ஐநா சபைக்கு மாற்றாக ரிபப்ளிக் அமைப்பு என்று வித்தியாசமான கதையை சொல்லி 2028 ஆண்டுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும் அதில் எந்த சுவாரசியமும் இல்லை.. சிறந்த கலைஞர்கள் இருந்தாலும் இந்த கதைக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இல்லை என்பது வருத்தமே..

காமெடி செய்து கொண்டிருந்த முனிஷ்காந்த் சிங்கம் புலி ஆகியோரை ஆக்சனில் இறக்கி விட்டது விபரீதமான முடிவுதான் ஹிப்பாப் ஆதி..

ஹிப் ஹாப் ஆதி தான் ஹீரோ என்றாலும் படம் முழுக்க நட்டி ஆதிக்கம் தெரிகிறது.. அவரது வாய்ஸ் ஓவர் மற்றும் அவரது காட்சிகள் படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தாலும் அவரின் வேகமான பேச்சு சில இடங்களில் புரியாமலே போகிறது..

ஆக வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் விபரீதமான கடைசி உலக போரை கொடுத்தார் ஹிப்ஹாப் ஆதி..

Kadaisi Ulaga Por movie review