கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்.. ரசிகனுக்கு செல்லதுரை

கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்.. ரசிகனுக்கு செல்லதுரை

 

 

கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்.. ரசிகனுக்கு செல்லதுரை 3.5/5

 

ஸ்டோரி…

தன் அம்மா கள்ளக்காதலுடன் ஓடி விட்டதால் மிலிட்டரி தந்தையும் குழந்தைகளை புறக்கணித்து விடுகிறார்.. எனவே தன் பெரியப்பா யோகிபாபு வளர்ப்பில் ஏகன் & சத்யதேவி இருவரும் வளர்கின்றனர்..

தன் வளர்ப்பில் எவரும் தன் தங்கையை குறை சொல்லி விடக்கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் ஏகன்..

ஒரு கட்டத்தில் தன் தங்கையின் காதல் விவகாரம் இவருக்கு தெரிய வருகிறது..

அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த என்ன? தன் தங்கையின் காதலை ஏற்றுக் கொண்டாரா.? அல்லது இவரது அம்மாவை போல் தங்கையின் வாழ்க்கை மாறிவிடும் என எண்ணம் கொண்டாரா.? என்ன செய்தார் அண்ணன் ஏகன்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Aegan as Chelladurai
Brigida saga as Thamaraiselvi
Sathya devi as Jeyasudha
Yogi babu as Periyasamy
Leo Sivakumar as Sounder

யோகி பாபுவை தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் புது முகங்கள்.. ஏகன் பிரிகிடா சத்யதேவி குட்டி புலி உள்ளிட்ட அனைவரும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்திருக்கின்றனர்.

தன் தங்கைக்காக ஓடும் அண்ணன்.. அதற்காக தன் காதலை துறக்கும் ஆண்மகன் என தன் கேரக்டரை ஏணிப்படிகளில் ஏற்றி இருக்கிறார்.. இவரது தந்தையே இந்த படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அழகாக செய்திருக்கிறார்..

தங்கை சத்யதேவியும் தன் அழகான நடிப்பிலும் கண்களாலும் கவர்கிறார்.. எதார்த்த கிராமத்து பெண்ணாகவும் அண்ணனுக்கு கட்டுப்பட்ட தங்கையாகவும் இலட்சிய பெண்ணாகவும் உயர்ந்து நிற்கிறார்.

இதுவரை ஏற்காத கேரக்டரில் யோகி பாபு.. காமெடி செய்ய காட்சிகள் இருந்தும் அடக்கி வாசித்து பெரியப்பா கேரக்டரை பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார் யோகி பாபு..

நாயகி பிரிகிடா.. இரவின் நிழல் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நாயகி வேடம் ஏற்றிருக்கிறார்.. தான் தினமும் பார்க்கும் ஒருவன் தன் காதலை ஏற்க மறுத்தாலும் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் இவரது எண்ணம் உயர்வானது..

சத்தியதேவியின் காதலனாக வரும் லியோ சிவகுமாரும் தன் கேரக்டரில் பளிச்சிடுக்கிறார்.. 2 அடி உயரமுள்ள குட்டிபுலி கேரக்டர் ரசிக்க வைக்கிறது… அவர் பேசும் பேச்சும் செய்கையும் படத்திற்கு கலகலப்பு ஊட்டி இருக்கிறது..

ஏகனின் அம்மாவாக ஐஸ்வர்யா தத்தா.. கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் கவர்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

Directed by Seenu Ramasamy
Music: N.R. Raghunandhan
Cinematography: Ashokraj
Dialogues: Prabhakar, Seenu Ramasamy
Editor: Srikar Prasad
Art Director: R. Saravana Abiraman
Production Supervisor: Selva Shanmugam
Choreographer : Nobel
Stunts: Stunner Shyam
Lyrics: Vairamuthu, Gangai Amaran, Pa. Vijay, Ekadesi
Costume Designs: V. Murthy

சமீபகாலமாக ரகுநந்தனின் இசை போற்றும் படியாகவே இருந்து வருகிறது.. இதில் மனதை வருடும் மெலோடி பாடலை கொடுத்து மண் மணம் மாறாத இசையுடன் கவர்ந்திருக்கிறார்.

ரகுநந்தனின் இசைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பாடல்களை நால்வர் எழுதியிருக்கின்றனர். வைரமுத்து, கங்கை அமரன், பா விஜய், ஏகாதேசி எழுதி இருக்கின்றனர்..

அனைத்து பாடல்களும் ரசிக்கும் வகையில் இருந்தாலும் கையேந்தும் கடவுள்.. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்..

ஒட்டுமொத்த படத்தையும் தேனி மாவட்டத்தில் நடத்தி தேன் சுவையை ஒளிப்பதிவில் கொடுத்திருக்கிறார் அசோக்ராஜ்..

போதை பாதைக்கு மாறிவிட்ட தமிழ் சினிமாவை கோழிப்பண்ணை பக்கம் இழுத்து வந்து இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி..

யோகிபாபு கேரக்டர் குடிப்பழக்கம் கொண்டவர் என சொல்லப்பட்டாலும் ஒரு காட்சியில் கூட குடிப்பழக்கம் இல்லை.. பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் மிலிட்டரி மேன் ஐஸ்வர்யாவின் கணவர் குடிப்பதாக காட்சி இருக்கிறது..

எதார்த்த மலையாள படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு மலையாள பட பாணியில் வந்திருக்கும் தமிழ் படம் தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை..

அம்மா அப்பா இல்லாத குழந்தைகள் சமுதாயத்தில் எப்படி ஒரு வலி மிகுந்த வாழ்க்கை வாழ்வார்கள் என செல்லதுரை கேரக்டர் மூலம் காட்டியிருக்கிறார் சீனு ராமசாமி..

அனைத்து கேரக்டர்களையும் பாசிட்டிவாக காட்டி இருப்பது சிறப்பு என்றாலும் கதையில் எந்த திருப்புமுனையும் இல்லாதது வருத்தம். சில காட்சிகள் சீரியல் போல மெதுவாக நகர்வதை தவிர்த்து இருக்கலாம் டைரக்டர்..

ஆக கோழிப்பண்ணை செல்லதுரை… ரசிகர்களுக்கு செல்லதுரை

Kozhipannai Chellathurai movie review