மாஸ்க் விமர்சனம் 3.75/5… மிடில் கிளாஸ் மூஞ்சி Vs ஹைடெக் சந்திரா..

மாஸ்க் விமர்சனம் 3.75/5… மிடில் கிளாஸ் மூஞ்சி Vs ஹைடெக் சந்திரா..

மாஸ்க் விமர்சனம் 3.75/5… மிடில் கிளாஸ் மூஞ்சி Vs ஹைடெக் சந்திரா..

 

ஸ்டோரி…

அரசியல்வாதி பவன் தன்னிடம் உள்ள ₹ 440 கோடியை ஹைடெக் லேடி ப்ரோக்கர் ஆண்ட்ரியாவிடம் கொடுத்து மக்களுக்கு பிரித்து கொடுக்க சொல்கிறார்.. விரைவில் தேர்தல் வர இருப்பதால் ரகசியமாக இந்த திட்டத்தை செயல்படுத்த சொல்கிறார்..

இந்த சூழ்நிலையில் ஆண்ட்ரியா தன் சூப்பர் மார்க்கெட்டில் வைத்திருக்கும் கோடி கணக்கான பண மூட்டைகள் எம்.ஆர். ராதா மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர்..

இதை வெளியே சொல்ல முடியாமலும் போலீஸிடம் சொல்ல முடியாமலும் தவிக்கும் ஆண்ட்ரியா டிடெக்டிவ் ஏஜென்ட் கவின் உதவிய நாடுகிறார்..

தேர்தலுக்குள் கோடிக்கணக்கான பணத்தை கண்டுபிடித்துக் கொடுத்தாரா கவின்.? அவரே கொள்ளையடித்தாரா.? ஆண்ட்ரியாவின் நிலைமை என்ன.? அரசியல்வாதி பவனின் பவர் என்ன.? மாஸ்க் மனிதர்கள் யார்.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கவின், ஆண்ட்ரியா, சார்லி, பவன், ருஹானி சர்மா மற்றும் பலர்..

அசால்ட்டாகா நீண்ட வசனங்களை பேசி நடிப்பில் கவர்கிறார் கவின்.. இவருக்கும் ருஹானிக்கும் உள்ள கள்ளக்காதல் ஹெல்மெட் ஐட்டம்.. ( படம் பார்த்தால் புரியும்..) நெகட்டிவ் ஹீரோவாக கவர்கிறார்..

வடசென்னை படத்தில் சந்திரா கேரக்டர் கலக்கி இருப்பார் ஆண்ட்ரியா.. அதற்கு நிகராக ஹைடெக் சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா அசத்தியிருக்கிறார்.. நடிப்பில் மிரள வைத்திருந்தாலும் தோற்றத்தில் குறை.. இறுக்கி கட்டிய தலை.. ஒட்டிய முகத்தால் ஆண்ட்ரியாவை ரசிக்க முடியல.. ஸ்டைலிஷ் லுக்கில் வந்திருக்கலாம்..

மிடில் கிளாஸ் மூஞ்சியை வைத்து சார்லி போடும் சதித்திட்டங்கள் சூப்பர்.. கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ் காட்டி இருக்கிறார் இந்த மாஸ்க் மனிதர்..

பணத்தை பறிகொடுத்த அரசியல்வாதி பவன்.. நடிப்பில் பளிச்சிடுகிறார்.. இவரது குரலும் தோற்றமும் சிறப்பு..

கவின் நண்பர்களாக கல்லூரி வினோத் மற்றும் ரமேஷ் திலக்.. இருவரும் நண்பர்களைப் போல கதைக்கும் பலமாக இருந்துள்ளனர்..

பேட்டரியாக நடித்த அந்த குள்ள ஹீரோ ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டல் ரகம்.. இவர் ஏற்கனவே ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்..

அஞ்சு நிமிஷமே வந்தாலும் அர்ச்சனாவின் நடிப்பு அபாரம்..

டெக்னீசியன்ஸ்…

இசை : ஜி.வி.பிரகாஷ்

கண்ணுமுழி பாடல் ஆட்டம் போட வைக்கும்.. இதுதான் எங்கள் உலகம், எம்.ஆர்.ராதா டச் வசனங்கள் சிறப்பு..

இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் பாடலும் தாளம் போட வைக்கும்..

தனது வழக்கமான இசை ரூட்டில் இருந்து மாறி பயணித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. அது இன்றைய GenZ ரசிகர்களை கவரும்.. பின்னணி இசை மிரட்டல் ரகம்.. ஆனால் பல இடங்களில் வசனங்களை தாண்டி ஒலித்து இருப்பது ஏனோ.??

ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்.. மாஸ்க் மனிதர்களின் கிளைமாக்ஸ் காட்சி அசத்தல்.. கவின் & ரூஹாணி ரொமான்ஸ் சீன்ஸ் லைட்டிங் அசத்தல்..

கவின் ஆண்ட்ரியா.. வசனங்களால் மோதும் காட்சி அழகு.. நெருங்கி வந்தால் ஜாலி..

ஜெய்லர் டைரக்டர் நெல்சன் வாய்ஸ் ஓவரில் படத்தின் கதை நகர்கிறது.. சில இடங்களில் வசனங்களை மீறி மியூசிக் ஓவர்லாக் செய்வதை கவனிக்கலையா.?

பல இடங்களில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது அடுத்தவர் பேசுவது வசனத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற வைக்கிறது.. என்ன சாரே..??

பிளாக் காமெடி என்ற நெல்சனின் பார்முலாவை படம் முழுக்க காண முடிகிறது.. முக்கியமாக கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி பேசும் காட்சி பிளாக் காமெடி டச்..

தயாரிப்பு : தி ஷோ மஸ்ட் கோ ஆன், பிளாக் மெட்ராஸ் பிலிம்

இயக்கம் : விகர்ணன் அசோக்

முகம் மறைக்காத அதிகாரம் மிக்கவர்கள் ஒரு பக்கம்… மாஸ்க் அணிந்த மிடில் கிளாஸ் மற பக்கம் என இரண்டையும் மோதவிட்டு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக்.. எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கொடுத்து எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறார் இந்த மாஸ்க் டைரக்டர்..

 

Mask movie review