இரவின் விழிகள் விமர்சனம்… சோசியல் மீடியா சொல்லும் மெசேஜ்

இரவின் விழிகள் விமர்சனம்… சோசியல் மீடியா சொல்லும் மெசேஜ்

இரவின் விழிகள் விமர்சனம்… சோசியல் மீடியா சொல்லும் மெசேஜ்

 

ஸ்டோரி…

இன்று எல்லாராலும் பார்க்கப்படும் youtube சமூக வலைத்தளத்தை வைத்து ஒரு எச்சரிக்கையான பாடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிக்கல் ராஜேஷ்..

யூடியூப் சேனல்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.. ஒரு பக்கம் டிரெண்டிங்காக பல குற்றச்சாட்டுகளை ஒருவர் சொல்ல அடுத்தவர் அதன் உண்மை நிலையை கண்டறிந்து சொல்ல இப்படியான சூழ்நிலையில் மோதலாக முற்றுகிறது..

ஒரு கட்டத்தில் அப்பாவி பெண்ணின் ஆபாச குற்றச்சாட்டு வைக்கப்பட அதுவே அவரை தற்கொலைக்கு தூண்டுகிறது.

இதனால் பாசமிக்க தன் தங்கையை இழந்த அண்ணன் எடுக்கும் அதிரடியான முடிவு தான் இந்த இரவின் விழிகள்..

 

கேரக்டர்ஸ்…

கதை நாயகனாக மஹேந்திரன்.. நடிப்பில் கூட இயல்பாகவே காணப்படுகிறார்..

நாயகியாக நீமா ரேய்.. ஆடை குறைத்து கவர்ச்சி நிறைந்து நம்மை மழைக் காலத்தில் சூடேற்றுகிறார்..

கருப்பு பாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.. இவரது காட்சிகள் நிறைவை தருகிறது.. ஒருவேளை இவரே இயக்குனர் இவரே நாயகன் என்பதால் இந்த சிறப்போ.?

நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் உண்டு.. சிசர் மனோகரின் தேவையற்ற டயலாக்குகள் எரிச்சல்.. கிடைத்த கேப்பில் எல்லாம் பேச வேண்டும் என நினைத்து விட்டாரோ என்னவோ.?

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. சில இடங்களில் பின்னணி இசை இரைச்சலை தவிர்த்து இருக்கலாம்.. “வாடா கருப்பு…” பாடல் மிரட்டல் ரகம்.. அஸ்மிதா ஆடும் குத்துப்பாட்டு குஷி ரகம்..

ஒளிப்பதிவாளர் பாஸ்கர்.. பெரும்பாலும் இரவு நேர காட்சிகளே உள்ளது.. பகல் நேர காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. முகமூடி மனிதன் யார் கொலைக்கான காரணம் என புரியாமல் முதல் பாதி முழுவதும் நகர்ந்து விடுகிறது..

படத்தொகுப்பாளர் ஆர்.ராமர்..

சவுக்கு சங்கர், ரவுடி பேபி உள்ளிட்ட யூடியூப்- இல் பிரபலமான நபர்களுக்கு வேறு பெயர் வைத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் சிக்கல் ராஜேஷ்..

சோசியல் மீடியா மோகத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். அதே சமயம் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரசியம் கொடுத்திருந்தால் இந்த இரவின் விழிகளுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைத்திருக்கும்..

 

Iravin Vizhigal movie review