மகா அவதார் நரசிம்மா (Animation) விமர்சனம்
மகா அவதார் நரசிம்மா (Animation) விமர்சனம்
ஸ்டோரி…
கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதை – மகா அவதார் நரசிம்மா.
கடும் தவம் இருக்கும் முனிவரின் தவத்தை கலைத்து விடுகிறார்.. உங்கள் மேல் தீராத காதல் கொண்டிருக்கிறேன்.. என் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்ல அவர் வேறு வழியின்றி உடலுறவு கொள்கிறார்.. அது முடிந்த பின்னர் நீ என் தவத்தை கலைத்து விட்டாய்.. உன் ஆசைப்படியே நடந்து விட்டாலும் உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் இந்த உலகத்தையே அழிக்கும் அரக்கர்களாக மாறிவிடுவர் என்கின்றார்.
அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது.. உலகையே மிரள வைக்கும் அரக்கர்கள் தங்கள் அராஜக குணத்தால் கட்டி ஆள்கின்றனர்.
தேவர்கள் கூட அனைவரும் வேறு வழியின்று பயந்து வாழ்கின்றனர்.. இந்த உலகத்தில் கடவுளை விட அசுர பலம் கொண்டவர்கள் நாங்கள் தான் என தலைகனத்தோடு வாழ்கின்றனர்..
இவர்களை அழிக்க எந்த சக்தியும் உலகத்தில் கிடையாது என்பதால் இவர்களின் அராஜகத்திற்கு அளவே இல்லை..

ஒரு சூழ்நிலையில் மூத்தவருக்கு பிரகலாதன் பிறக்கிறான்.. சிறு வயது முதலே அவனுக்கு விஷ்ணு மீது தீராத பக்தி.. எந்த சூழ்நிலை வந்தாலும் விஷ்ணுவை கைவிடாமல் பக்தியால் வணங்கி வருகிறார்.. இதனைக் கண்டு அப்பனுக்கு அதிர்ச்சியாகிறது.. அவனை கொல்ல பல வழிகளில் திட்டமிடுகிறார்.
யானை, நெருப்பு, நீர் இப்படியாக பல வழிகளில் முயற்சித்தும் அவன் உயிரை பறிக்க முடியவில்லை..
இந்த சூழ்நிலையில் பிரகலதன் என்ன செய்தார்.? அரக்கனுக்கும் இவருக்கும் உள்ள மோதல் என்ன ஆனது.? சிறுவன் பிரகலாதன் பக்தியை கண்டு விஷ்ணு இறங்கி வந்தாரா.? அரக்கனை சமாளித்தாரா.? கடவுள் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை..

டெக்னீசியன்ஸ்…
சாம். சி எஸ் இசையில் பாடல்கள் மனதை வருடுகிறது.. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்..
குழந்தைகள் ரசிக்கும் வகையில் அனைத்து காட்சிகளையும் அழகாக அனிமேஷன் செய்திருக்கின்றனர்.. ஒவ்வொரு காட்சிகளும் நடிகர்களை கேரக்டரை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. முக்கியமாக கடைசியாக நரசிம்மர் அவதாரம் எடுக்கும் அந்த சிங்க முகம் காட்சிகள் மிரட்டல் ரகம்.
நீங்கள் கடவுளை மறுப்பராக இருந்தாலும் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்..
Mahaavatar Narasimha movie review

