மெட்ராஸ்காரன் விமர்சனம்…
மெட்ராஸ்காரன் விமர்சனம்…
ஸ்டோரி…
சென்னை நாயகன்.. நாயகி.. இவர்களுக்கு புதுக்கோட்டையில் திருமணம் நடக்கவிருக்கிறது.. தன்னுடைய வருங்கால மனைவியை பார்ப்பதற்காக காரில் செல்கிறார் நாயகன். போகும் வழியில் கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார்.
அதனால், அவரது வயிற்றில் உள்ள குழந்தையும் இறந்துவிடுகிறது. அதுவும் ஒரு கொலைதான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நாயகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குகிறது..
சிறைத் தண்டனையை அனுபவித்து பின்னர் வெளியே வந்த பின்னர் தான் அந்த சிசு இறப்புக்குத் தான் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது.. அதன் பின்னர் நாயகன் என்ன செய்தார்? கோர்ட் என்ன செய்தது? நாயகன் என்ன முடிவு எடுத்தார்? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
Shane Nigam – Sathya
Kalaiyarasan – Durai Singam
Niharika – Meera
Aishwarya Dutta – Kalyani
Karunaas – Hero’s Uncle
Pandiyarajan – Hero’s Father
Super Subburayan – Muthu Pandi
Charan – Manimaran
Geetha Kailasam
ஷேன் நிகாம்.. நாயகன் இவரே.. மெட்ராஸ்காரன் என டைட்டில் இருந்தாலும் இவர் புதுக்கோட்டை காரன்தான்.. ஆனால் இவரது பேச்சில் தமிழை விட மலையாள மணம் அதிகம்.. எனவே கேரளாக்காரன் என சொன்னாலும் ஓகே.. கொடுத்த வேலையை நாயகனாக நிறைவாக செய்து இருக்கிறார்.. முக்கியமாக குற்ற உணர்வில் அவர் அழும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..
கலையரசன் கேரக்டர் நல்லவரா?கெட்டவரா? என்ற கன்ப்யூஷன்.. ஆனாலும் அவரது நடிப்பும் உடல் மொழியும் படத்திற்கு பலம்.. நடிப்பில் கலக்கல் ரகம் கலையரசன்.
ஷேன் நிகாம் காதலியாக நிஹரிகா கொனிடலா.. கலையரசன் மனைவியாக ஐஸ்வர்யா தத்தா.. வழக்கமான தமிழ் சினிமா நாயகிகளாக வந்து செல்கிறார்கள் கேரக்டரில் கூடுதல் கவனம் கொடுத்து இருக்கலாம்..
இவர்களுடன் கருணாஸ், கீதா கைலாசம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கச்சிதம்..
டெக்னீசியன்ஸ்…
Producer : SR PRODUCTIONS – B Jagadish
Writer & Director : Vaali Mohan Das
Music : Sam CS
Cinematographer : Prasanna S Kumar
Editor : Vasantha Kumar
Art – Ananth Mani
Stunt – Dinesh Subbrayan
PRO – Sathish (AIM)
‘ரங்கோலி’ மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ் இந்த மெட்ராஸ்காரன் படத்தை இயக்கியிருக்கிறார்.. விபத்து, அரசியல், முன்பகை என திரைக்கதையில் சில திருப்பங்களை வைத்து தனிமனித குற்ற உணர்ச்சியை படமாக்கி இருக்கிறார்..
பிரசன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. கிராமத்து காட்சிகளை மண்மணம் மாறாமல் கொடுத்திருக்கிறார்.. அது போல சாம் சி எஸ்-ன் பின்னணி இசை மிரட்டல்.. கதைக்குத் தேவையான உணர்வுவை இசை மூலம் கொடுத்திருக்கிறார்..
இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தமே.. திருப்பம் மேல் திருப்பம் திகட்ட கொடுத்து கிளைமாக்ஸ்சிலும் புதிய கேரக்டரை கொண்டு வருவது.. ஒருவேளை இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப புள்ளியா? எனக் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு விபத்து நமக்கு நடந்தால் அது சம்பவம்.. அது மற்றவர்கள் நடந்தால் அது தகவல்.. நாம் கடந்து செல்கிறோம். ஆனால் ஒவ்வொரு விபத்துகளுக்கு பின்னாலும் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வாலி மோகன் தாஸ்..
Madraskaaran movie review


