மார்கன் விமர்சனம்.. சஸ்பென்ஸ் திரில்லர் என மார்த் தட்டிக் கொள்வான்

மார்கன் விமர்சனம்.. சஸ்பென்ஸ் திரில்லர் என மார்த் தட்டிக் கொள்வான்

மார்கன் விமர்சனம்.. சஸ்பென்ஸ் திரில்லர் என மார்த் தட்டிக் கொள்வான்

 

ஸ்டோரி…

நள்ளிரவில் வீடு திரும்பிய ஒரு பெண் விஷ ஊசி போட்டு உடல் கருகிய நிலையில் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனை விசாரிக்க சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி.. இவருடன் பிரிகிடா மற்றும் மகாநதி சங்கர் இருவரும் இணைந்து பல விதங்களில் விசாரணை செய்கின்றனர்..

அப்போது சந்தேகத்தின் பேரில் அஜய் திஷனை பிடித்து விசாரிக்கின்றனர்.. அவர் மூலம் பல திடுக்கிடும் சம்பவங்கள் நகர்கிறது.. அதன்பின்னர் என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இனிமேல் ரொமான்ஸ் படங்களில் நடிப்பேன் என்று சொன்ன விஜய் ஆண்டனி மீண்டும் திரில்லருக்கு யு டர்ன் போட்டு இருக்கிறார்.. பழக்கப்பட்ட ரூட் என்பதால் பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

விஜய் ஆண்டனி உறவினர் அஜய் தீஷன் வில்லன் வேடம் என்று சொல்லப்பட்டாலும் அவர் வில்லன் இல்லை.. ஆனால் சிறந்த நடிப்பை தன் அறிமுகப்படத்திலேயே கொடுத்து அசத்தியிருக்கிறார்.. இனி இவருக்கு ஹீரோவாக பல வாய்ப்புகள் வரும் என நிச்சயமாக சொல்லலாம்..

 

போலீசாக வரும் மகாநதி சங்கர், பிரிகிடா ஆகியோர் அசத்தல்.. விஜய் ஆண்டனி அருகில் இருந்தாலும் இவர்களுக்கே நிறைய வசனங்கள்.. அதிலும் இருவரும் ஸ்கோர் செய்துள்ளனர்.. பிரிகிடா காக்கி உடையிலும் கலர்ஃபுல்லா கவர்கிறார்..

கம்பீரமாக வரும் சமுத்திரக்கனி கேரக்டரில் இன்னும் வலு சேர்த்து இருக்கலாம்.. மற்றொரு நாயகி தீப்ஷிகா கொஞ்சம் வந்தாலும் படத்தின் திருப்புமுனையாக மாறி இருக்கிறார்.. இவர்களோடு வினோத் சாகர், ராமச்சந்திரன், கனிமொழி உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா ஒர்க் சிறப்பு.. அதுபோல கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.. கருகிய உடலை அசலாக காட்டியிருப்பது செம..

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.. திரில்லருக்காக நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்..

எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இதில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

கருப்பு நிறம் & வெள்ளை நிறம் இரண்டை வைத்து படத்தின் கிளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. அதை வித்தியாசமாக அவர் கையாண்டிருப்பது சிறப்பு.. அதே சமயம் எடிட்ராக இருந்து என்று இயக்குனராக உயர்ந்திருக்கும் லியோ ஜான்பால் முதல் பாதியில் நிறைய கத்தரி போட்டு இருக்கலாம்.. ஆமை வேகத்தில் செல்வது அயற்சி தருகிறது..

Maargan movie review