லவ் மேரேஜ் விமர்சனம்.. 80ஸ் கிட்ஸ்களின் எட்டாத கல்யாண கனவு
லவ் மேரேஜ் விமர்சனம்.. 80ஸ் கிட்ஸ்களின் எட்டாத கல்யாண கனவு
ஸ்டோரி….
33 வயதாகியும் திருமணமகாதவர் நாயகன் விக்ரம் பிரபு.. ஒரு கட்டத்தில் நாயகி அஷ்மிதாவை குடும்பத்துடன் பெண் பார்க்க செல்கின்றனர்.
இவர்கள் சென்ற பஸ் பழுது ஆனதால் அடுத்தநாள் வீடு திரும்ப முடியாத சூழ்நிலையில் அங்கேயே தங்குகின்றனர் அப்போது மேலும் கொரனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.. அங்கே தங்கும் சூழ்நிலையில் திருமணத்தைப் பேசி விரைவில் முடிக்க நினைக்கின்றனர்..
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருப்பதால் திருமணத்திற்குள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார் நாயகி.. அதன் பிறகு என்ன செய்தார் விக்ரம் பிரபு? அவருக்கு திருமணம் நடந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், ரியோ ராஜ்
பெரும்பாலும் ஆக்சன் படங்களில் அசத்திய விக்ரம் பிரபு இதில் காமெடியும் செய்து இருக்கிறார்.. 35 வயதில் திருமணம் ஆகாத வாலிபரின் உணர்வுகளை தன் கேரக்டர் உணர்வு பூர்வமாக நடித்துக் காட்டியிருக்கிறார்..
அம்பிகா ராதா என்ற கேரக்டர் பெயரில் அஸ்மிதா மற்றும் மீனாட்சி.. இருவரும் நடிப்பிலும் அழகிலும் ஸ்கோர் செய்திருக்கின்றனர்..
விக்ரம் பிரபுவின் தந்தையாக கஜராஜா.. நடிப்பில் கம்பீர ராஜா.. எங்கு மகனின் திருமணம் நின்று விடுமோ என பயப்படும் காட்சிகளில் தந்தையாக ஜொலிக்கிறார்..
காமெடி கலந்த வில்லத்தனத்த்தில் அருள்தாஸ் அசத்தியிருக்கிறார்..
![]()
டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்… பின்னணி இசையிலும் பாடல் தரத்திலும் பின்னி எடுத்திருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்.. அழகான காட்சிகள் மூலம் நம்மை வசப்படுத்தி விட்டார்..
திருமண வயதை எட்டியும் திருமணமாகாத ஆண்களின் வலியை அழகான வசனங்கள் மூலம் விக்ரம் பிரபு உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்..
லவ் மேரேஜ் என்றால் காதலர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அதை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு கல்யாண கலாட்டா நடத்தி இருக்கிறார் இயக்குனர் சண்முகபிரியன்..
Love Marriage movie review

