லாக்டவுன் விமர்சனம் 3.75/5… பெண்களின் வலி-யை லாக் செய்ய முடியாத உலகம்
லாக்டவுன் விமர்சனம் 3.75/5… பெண்களின் வலி-யை லாக் செய்ய முடியாத உலகம்
ஸ்டோரி…
ஒரு நாள் இரவு நேர மதுவிருந்தில் கலந்து கொள்கிறார் நாயகி அனுபமா.. அதன் விளைவாக 2 மாதம் கர்ப்பிணி.. ஆனால் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாத மிகப் பெரிய கொடுமை..
இந்த சூழ்நிலையில் கொரோனா லாக் டவுன்.. கருக்கலைப்பு செய்யவும் முடியாமல்.. வெளியே போகவும் முடியாமல் கழிவறைக்குள் கஷ்ட காலங்களை கடக்கும் கன்னி பெண் அனுபமா என்ன செய்தார் என்பதுதான் இந்த படத்தின் மையக் கரு..

கேரக்டர்ஸ்…
மெலிந்த தேகம்.. சிக்கல் முடி ஹேர் ஸ்டைல்.. வேலை தேடும் சராசரி பெண்.. பெற்றோருக்கு கட்டுப்பட்ட மங்கை.. சொல்ல முடியாத வலிகளை சுமக்கும் இளம்பெண் இப்படியாக பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார் அனுபமா..
சார்லி – நிரோஷா.. பெற்றோர் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனர்.. மகள் படும் கஷ்டம் என்ன என்பதை ஒரு தந்தையாக உணர்ந்து நடித்திருக்கிறார் சார்லி.. நடவடிக்கைகளைப் பார்த்தே மகளை கணக்கு போடும் அம்மாவாக நிரோஷா..
பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கேரக்டர்களின் சிறப்பு..
சில காட்சிகளில் வந்தாலும் மஹானா மயக்கி விடுகிறார்.. இவருக்கு இப்படி ஒரு ஜோடியா? ஹீரோயின் / தோழி கேரக்டர் கொடுத்திருக்கலாமே என கேட்கத் தோனுது..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவும் இசை கோர்வையும் கதையை தாங்கி நிற்கும் உணர்வை தருகிறது..
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்
இசை: என்.ஆர்.ரகுநந்தன்
AR ஜீவா என்பவர் இயக்கி இருக்கிறார்.. லாக் டவுனில் நாம் பட்ட அவஸ்தைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
அதே சமயம் லாக்டவுனில் இப்படி எல்லாம் சுற்றி திரிய முடியுமா.? போலீஸ் கெடுபுடி இருந்தும் நாயகி அனுபமா அவரது தோழி எப்படி சுற்றுகிறாள் என்பதுதான் புரியாத புதிர்.. ஆனால் அந்த பிரச்சனைகளை பார்க்காமல் இது நடந்த நிஜக்கதை என்பதால் நம்மால் சில விஷயங்களை ஒத்துக்கொள்ள தோன்றுகிறது..
பெரும்பாலும் எந்த ஒரு நாயகியும் ஒப்புக் கொள்ள மறுக்கும் கேரக்டரை அசால்டாக தன் நடிப்பில் மிரள செய்திருக்கிறார் அனுபமா.. அந்த கேரக்டரின் வலியை ஹீரோயினுக்குள் கடத்தி கேரக்டராக உருவகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜீவா..
Lock down movie review

