கருப்பு பல்சர் விமர்சனம்… பல்சர் தரும் பயம்
கருப்பு பல்சர் விமர்சனம்… பல்சர் தரும் பயம்
ஸ்டோரி…
ரேஷ்மாவை காதலிக்கிறார் தினேஷ்.. ஒரு நாள் எதார்த்தமாக ஒரு சின்ன பொய் சொல்லி விடுகிறார்.. அதாவது தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக சொல்கிறார்.. அப்படி என்றால் அடுத்த முறை சந்திக்கும் போது அந்த வண்டி எடுத்து வா நாம் ஊர் சுற்றலாம் என்று சொல்லிவிடுகிறார் நாயகி..
சொன்ன பொய்யை நிரூபிக்க வேறு வழியில்லாமல் என்று செகண்ட் ஹேண்டில் அதேபோல பைக் வேண்டும் என தேடி அலைகிறார். அப்போது மன்சூரிடம் கருப்பு பல்சர் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து விடாப்பிடியாக வாங்கி வந்து விடுகிறார்..
அந்தக் கருப்பு பல்சர் பைக்கில் பெண்ணை வைத்துக் கொண்டு சுற்றினால் கண் மங்கலாக தெரிகிறது.. விபத்து ஏற்படுகிறது.. இதனால் அந்த வண்டி ஓட்டுவதை தவிர்க்க நினைக்கிறார் தினேஷ்.. இவரது நண்பர் ராகுலும் அதே போல பைக்கை எடுத்துக் கொண்டு அவரது மனைவியை அழைத்துக்கொண்டு போகும்போது அதேபோல விபத்து ஏற்படுகிறது..
அப்படி என்றால் பெண்ணை மட்டும் பைக்கில் ஏற்றினால் என்ன பிரச்சனை.? இதற்கான பின்னணி என்ன.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
இதில் தினேஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார்.. ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
காதலிக்காக வழிவது காதலிக்காக ஓடுவது என யதார்த்த இளைஞராக தினேஷ்.. பிளாஷ்பேக்கில் ஜல்லிக்கட்டு வீரனாக.. என இரு மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார்.. இரண்டிலும் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்..
உதடுகள் மட்டுமல்ல என் கண்களும் பேசும் என் புருவங்களும் பேசும் என முக பாவனைகள் வசீகரிக்கிறார் ரேஷ்மா..
நிழல் கதைக்கும் பிளாஷ்பேக் கதைக்கும் என்ன தொடர்பு என்பதை கனெக்ட் செய்யும் ஆபீசராக சரவண சுப்பையா..
இவர்களுடன் மன்சூர் அலிகான், மதுனிக்கா உண்டு.. பிரான்ஸ்டர் ராகுல் சில நேரங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
டாக்டர் சத்ய முரளி கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.. இந்தப் படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முரளி கிரிஷ்..
காமெடியில் கல்லா கட்டிய இயக்குனரிடம் பணிபுரிந்தவர் தானே.. எனவே இவரும் காமெடி படம் செய்ய முயற்சித்திருக்கிறார்.. ஆனால் ஒரு சிறந்த காமெடி நடிகரை பயன்படுத்தி இருக்கலாம்
பல்சர் அமானுஷ்யங்கள் ரசிக்க வைக்கிறது.. பொதுவாக பேய் படங்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டு பெண்கள் தான் பேய் ஆட்டம் ஆடுவார்கள்.. ஆனால் பைக் சாகசங்கள் வைத்து மிரட்டி இருக்கிறார்.. இன்னும் கூடுதல் ஜல்லிக்கட்டு காளை காட்சிகள் வைத்திருக்கலாம்.. அவையெல்லாம் கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாக தெரிகிறது..
ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்ட கருப்பு பல்சர் பேயை இதில் கொஞ்சம் ரசிக்கலாம்… வாழ்த்துக்கள்..
Karuppu Pulsar movie review

