என்ன விலை விமர்சனம் 4.25/5.. அரசு சிஸ்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனின் தன்மானம் என்ன விலை.?
என்ன விலை விமர்சனம் 4.25/5.. அரசு சிஸ்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனின் தன்மானம் என்ன விலை.?
ஸ்டோரி…
ராமேஸ்வரம் கடல் பகுதி அருகே வசித்து வருகிறார் கருணாஸ்.. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் அக்னி தீர்த்தத்தில் குளிக்கும் போது காணிக்கை நாணயங்களை கடலில் வீசி செல்வது வழக்கம்… இந்த நாணயங்களை கடலில் மூழ்கி எடுத்து தன் வாழ்வாதாரத்தை ஓட்டி வருபவர் கருணாஸ்..
ஒரு நாள் இப்படியான சூழ்நிலையில் கடலில் மூழ்கி எடுக்கும் போது ஒரு விலை உயர்ந்த பொருளை எடுத்து வருகிறார்.. தன் மனைவியின் ஆலோசனைப்படி அது காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் போது அங்கு உள்ள களவாளி காவலளர்கள் தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ள நினைக்கின்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உயர் அதிகாரி வரும்போது கருணாஸ் மீது திருடன் பட்டத்தை கட்டி விடுகின்றனர்.. செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறார் கருணாஸ்.. கருணாஸ் நிரபராதி என்பதால் அவருக்காக அவர் நீதிக்காக போராட வருகிறார் வக்கீல் நிமிஷா சஜயன்..
ஆனால் கடலுக்குள் விழுந்த மதிப்புமிக்க பொருள் அரசாங்கத்திற்கே சொந்தம் என அரசு தரப்பு வக்கீல் வாதாட இறுதியில் என்ன நடந்தது..? நிரபுராதி தண்டிக்கப்பட்டாரா அரசை எதிர்த்து வக்கீலால் வாதாட முடிந்ததா.? நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம் ? என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
பல படங்களில் காமெடியனாக குணச்சித்திர கேரக்டரில் ஜொலித்த கருணாஸ் இதில் கதையின் நாயகனாக தவசிமுத்துவாக வாழ்ந்திருக்கிறார்.. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கும் போது அதன் முகபாவனைகளை அதன் வலிகளை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.. சித்தா ஜிகர்தண்டா xx டிஎன்ஏ உள்ளிட்ட படங்களின் நடித்த இவர் இதில் ஒரு வக்கீலின் வாதம் எப்படி இருக்க வேண்டும்.. நிரபராதி எந்த விதத்திலும் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் எடுக்க ஒவ்வொரு செயலும் வக்கீல் மீது நன்மதிப்பை கூட்டுகிறது..
கருணாஸ் மனைவியாக பாலம்மா கேரக்டர் நடித்த வரும் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்..
விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஷாஷா சிவகுமார், சேத்தன் சீனு உள்ளிட்ட அனைவரும் கேரக்டர்களுக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்..

டெக்னீசியன்ஸ்….
இசை பயணத்தில் 100 படங்களை கடந்துவிட்ட சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. இது முழுக்க முழுக்க கடல் சார்ந்த படம் என்பதால் கோர்ட்டு காட்சிகளில் வாதாடும்போது கூட அதற்கு பின்னணியில் நீர்க்குமிழி (வாட்டர் பபுள்ஸ்) பின்னணி இசை கொடுத்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்..
ஒளிப்பதிவாளர் ஆல் பி. ஆண்டனி.. ராமேஸ்வரம் வரத்திற்கு நாம் சென்று வந்த உணர்வை தன்னுடைய காட்சிகளில் பிரதிபலிக்கிறார்..
ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம்.. இது தேவையற்ற காட்சி என்று நாம் எங்கும் சொல்ல முடியாதபடி காட்சிகளை கட்டிங் செய்திருக்கிறார்..
இயக்குனர் – சஜீவ் பழூர்.. மலையாளத்தில் பிரபலமான இவர் தேசிய விருது வென்று இருக்கிறார்.. ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு வலிமையான கருத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்..

கோர்ட் காட்சிகளில்.. கடலுக்குள் இருக்கும் மீன்கள் யாருக்கு சொந்தம் மக்களுக்கா.? அரசுக்கா? மீனவர்களுக்கா.?
அக்னி தீர்த்த கடலில் வீசப்படும் காணிக்கை பொருட்கள் யாருக்கு சொந்தம்? தொல்லியல் துறைக்கு? இப்படி பல கேள்விகளை நம் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் சஜீவ் பழூர்.
கிளைமாக்ஸ் காட்சியில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்படுவதும் காண்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்..
எத்தனையோ பொய் வழக்குகளை காவல்துறை அப்பாவிகள் மீது திணிப்பதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம்..
அப்படியான சூழ்நிலையில் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.. அவர் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம்.. அதிகாரத்தை மீறி அரசு செயல்படக்கூடாது.. அதற்கு அரசும் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் காட்சிகளை வைத்திருப்பது நீதிமன்றம் மீதும் அரசு மீதும் மக்களுக்கான நம்பிக்கையை என்றும் அதிகரிக்க செய்யும்..
இதுவரை இப்படி ஒரு சினிமா வந்திருக்குமா என்று தெரியாது காரணம் இதன் கிளைமாக்ஸ் நம் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. ஒரு சாமானியனின் தன்மானத்திற்கு என்ன விலை.. நிச்சயம் நாம் பார்த்து மகிழ வேண்டிய காவியம்..
Karunas in Enna Vilai movie review

